இந்தியன் 2: கமலுக்கு பேரனாகும் சிம்பு.. அப்போ காஜல் தான் பாட்டியா?

இந்தியன் 2 படத்தில் கமலுக்கு பேரனாக சிம்பு நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

கமலுக்கு பேரனாக சிம்பு | மேலாடை இல்லாமல் கடல்கன்னி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா

சென்னை: இந்தியன் 2 படத்தில் கமலுக்கு பேரனாக சிம்பு நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2.0 பட வெற்றியைத் தொடர்ந்து கமலை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர். முதல் படத்தில் லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுத்த இந்தியன் தாத்தா, இப்படத்தில் சமகால அரசியலுக்கு எதிராகப் போராடுவார் எனக் கூறப்படுகிறது.

கட்சி ஆரம்பித்து அரசியல் பிரவேசம் செய்துள்ள கமலுக்கு உதவும் வகையில் இப்படம் நிச்சயம் அரசியல் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் கமலின் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். i

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

22 ஆண்டுகளுக்குப் பின்:

22 ஆண்டுகளுக்குப் பின்:

1996ம் ஆண்டு கமல் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்'. இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். தற்போது சுமார் 22 ஆண்டுகளுக்கு பின்னர் எடுக்கப்படும் இப்படத்தில் பேரன் கதாபாத்திரமும் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

பேரனாக சிம்பு:

பேரனாக சிம்பு:

இந்நிலையில் இப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் தாத்தா கமலுக்கு பேரனாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இத்தகவலை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.

மேக்கப் டெஸ்ட்:

மேக்கப் டெஸ்ட்:

சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு வெளிநாட்டில் மேக்கப் டெஸ்ட் நடந்ததாக அவரே கூறியிருந்தார். இதன்மூலம் முதல் பாகத்தில் சுகன்யா நடித்தது போன்று, தாத்தா கமலுக்கு ஜோடியாகத் தான் அவர் நடிக்க இருக்கிறார் எனப் பேசப்பட்டது.

ரசிகர்கள் அதிர்ச்சி:

ரசிகர்கள் அதிர்ச்சி:

அந்த அடிப்படையில் பார்த்தால் சிம்புவுக்கு பாட்டியாக அவர் நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போது தான் தமிழில் மேலும் சில புதிய படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் காஜல். அதற்குள் சிம்புவுக்கு பாட்டியாக நடிக்க எப்படி சம்மதித்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தென்கொரிய நடிகை:

தென்கொரிய நடிகை:

காஜல் மட்டுமின்றி, இப்படத்தில் தென்கொரியாவின் பிரபல நடிகையும் பாடகியுமான சுஜி பே என்பவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தைவானில் படமாக்கப்பட உள்ளது. படத்தில் இவர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X