For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியன் 2 கிளைமாக்ஸ் லீக்.. அப்டியே ரமணா மாதிரியே இருக்கே.. அப்போ 3ம் பாகத்துக்கு வாய்ப்பேயில்லையா?

|
Indian 2 Movie: இவரே இப்படி சொன்னால் அப்போ ரஜினி?- வீடியோ

சென்னை: இந்தியன் 2 படத்தின் கதை சமீபத்தில் வெளியான நிலையில், அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி குறித்த தகவலும் லீக்காகியுள்ளது.

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு சிக்கல்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் உள்பட நிறைய பேர் நடிக்கிறார்கள்.

இந்தியன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் உருவாகி வருகிறது. எனவே இதிலும் கமல் இந்தியன் தாத்தா கெட்டப்பில் தான் நடிக்கிறார். அதன் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன.

ஒரு தாஜ்மஹால் இன்னொரு தாஜ்மஹாலை பாக்குதே... அடடே காஜலை புகழும் நெட்டிசன்ஸ்

முதற்கட்ட படப்பிடிப்பு

முதற்கட்ட படப்பிடிப்பு

தற்போது இந்தியன் 2 படத்தின் முதற்கட்டப் படிப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் போடப்பட்டிருந்த செட்டில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இதையடுத்து தற்போது படக்குழு ஜெய்ப்பூர் சென்றுள்ளது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்தியன் 2 கதை

இந்தியன் 2 கதை

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியன் 2 படத்தின் கதை என ஒன்று இணையத்தில் வைரலானது. அதன்படி சமூக போராளியான சித்தார்த்தும், அவரது மனைவி ரகுல் ப்ரீத் சிங்கும் ஊழல் அரசியல்வாதிகள் குறித்து தங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தியன் தாத்தா

இந்தியன் தாத்தா

இதனால் கோபமடையும் அரசியல்வாதிகள் சித்தார்த் மற்றும் ரகுலை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் கமல், சித்தார்த்தை காப்பாற்றுகிறார். அவரிடம் இருந்து ஊழல் அரசியல்வாதிகளில் பட்டியலை வாங்கி, வர்மக்கலை மூலம் ஒவ்வொருவராக போட்டு தள்ளுகிறார். இது தான் கடந்த வாரம் வெளியான விஷயம்.

முக்கிய தலைவர்

முக்கிய தலைவர்

இது தொடர்பாக புதிய தகவல்கள் சில கிடைத்துள்ளன. அதன்படி கமல் மொத்தம் ஏழு பேரை கொலை செய்கிறார். அதில் இந்திய அரசியலில் மிக முக்கிய பதவியில் இருக்கும் ஒருவரும் அடக்கம் என்கிறார்கள். இடைவேளைக்கு பிறகு கமலின் ருத்ரதாண்டவம் தான் படமாம்.

தூக்கு

தூக்கு

மேலும் கடைசியில் போலீசாரிடம் தானாகவே சரணடைகிறார் கமல். அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. மக்கள் எல்லாம் சோகத்தில் மூழ்குகிறார்கள். கமல் தூக்கில் போடப்படுவதுடன் படம் முடிகிறது. அதோடு இந்தியன் படத்திற்கும் எண்ட்கார்டு போடப்பட்டுள்ளது. ஆக இந்தியன் 3 வருவதற்கு வாய்ப்பில்லையாம்.

ரமணா கிளைமாக்ஸ்

ரமணா கிளைமாக்ஸ்

ஆனால் இந்த தகவல் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. கடந்த வாரம் முதலே இந்தியன் 2 கதை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் உலாவுகின்றன. ஆனால் இதுகுறித்து படக்குழு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. அதோடு இந்தியன் 2 கிளைமாக்ஸ், ஏற்கனவே ரமணா படத்தில் இடம் பெற்றது தான்.

ஒரே கதைக்களம்

ஒரே கதைக்களம்

கதையும் கூட ஏறக்குறைய இரண்டுமே ஒன்று தான். இரண்டு படத்திலுமே ஊழல், லஞ்சம் பற்றித்தான் பேசியிருப்பார்கள். தற்போது கிளைமாக்சும் ஒரே மாதிரி இருந்து விட்டால், நன்றாக இருக்குமா என்பது தெரியவில்லை. இந்தியன் 2 பட ரிலீசுக்குப் பிறகுதான் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவரும்.

English summary
A story line from Indian 2 movie leaked online last week. Now adding to it a new information in rounding in Kollywood. It is that in Indian 2 Climax Kamal will surrender to the police and he will be sentenced to death.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more