கமலின் இந்தியன் 2 ரிலீஸுக்கு வந்த சோதனை... காத்திருக்கும் சூர்யா 42... குழப்பத்தில் ஷங்கர்!
சென்னை: கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.
ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது.
இந்தியன் 2 ஜூன் அல்லது தீபாவளி தினத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது அடுத்தாண்டு பொங்கலுக்கு தான் இந்தப் படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாமதமான இந்தியன் 2
கமல் - ஷங்கர் கூட்டணியில் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் 2, அடுத்தடுத்து பல பிரச்சினைகளால் அப்படியே முடங்கியது. கடந்தாண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட்டால் மீண்டும் இந்தியன் 2 தொடங்கப்பட்டது. லைகா, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் உடன் ரெட் ஜெயன்ட் மூவிஸும் இணைந்ததால், இந்தியன் 2 ஷூட்டிங் தற்போது வேகவேகமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும், இயக்குநர் ஷங்கர ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்திலும் பிஸியாக இருப்பதால் இந்தியன் 2 தாமதமாகிக் கொண்டே இருக்கிறது.

ரிலீஸ் தேதியில் சிக்கல்
இந்தியன் 2 ஷூட்டிங் திருப்பதி, ஹைதராபாத் பகுதிகளைத் தொடர்ந்து சென்னையிலும் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன்னர் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் கமல் இருக்கும் போட்டோஸ் வைரலாகின. இதனால் இந்தியன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்பட்டது. அதேபோல் ஜூன் மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என செய்திகள் தெரிவித்தன. ஆனால், தற்போது இதிலும் சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறது.

2024 பொங்கல் ரிலீஸ்
ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர், கார்த்தியின் ஜப்பான் ஆகிய படங்கள் தீபாவளி ரேஸில் களமிறங்கும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் அதற்குள் இந்தியன் 2 ஷூட்டிங், போஸ்ட் புரோடக்ஷன்ஸ் முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில் ராம் சரணின் கேம் சேஞ்சர் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. அதனால் முதலில் அந்தப் படத்தின் ஷூட்டிங் தான் முதலில் முடியும் என சொல்லப்படுகிறது. அப்படியாகும்பட்சத்தில் இந்தியன் 2 தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.

சூர்யா 42 ரிலீஸ் அப்டேட்
அதேபோல், சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் 'சூர்யா 42' திரைப்படமும் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. 10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் 70 நட்கள் வரை நடைபெறுமாம். அதன்பின்னர் கிராபிக்ஸ், போஸ்ட் புரோடக்ஷன்ஸ் வேலைகள் முடிந்து 2024 பொங்கலுக்கு தான் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதனால், கமலின் இந்தியன் 2, சூர்யா 42 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











