தைவான் தாத்தா.. சிக்ஸ்பேக் தாத்தா.. லைகாவின் விளம்பரம் எல்லாம் வேறமாதிரி இருக்கே!
சென்னை: சியான் விக்ரமை வைத்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கோப்ரா படத்தில் செய்த அத்தனை சித்து வேலைகளையும் இந்தியன் 2 படத்தில் ஷங்கர் முயற்சி செய்து பார்த்து விட்டார். அதனால், தான் அந்த படம் ரசிகர்களை கனெக்ட் செய்யவில்லை என்கின்றனர்.
இந்தியன் 2 படத்துக்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனங்களால் கடுப்பான தயாரிப்பு நிறுவனம் இப்போதாவது படத்தை கொஞ்சம் ட்ரிம் பண்ணுங்க என ஷங்கரை வலியுறுத்த மனசே வராமல் வெறும் 12 நிமிடக் காட்சிகளை மட்டுமே ட்ரிம் செய்ய அனுமதியளித்துள்ளார்.

படத்தை எப்படியாவது 100 கோடிக்கும் அதிகமான வசூல் படமாக பாக்ஸ் ஆபிஸில் காட்டும் முயற்சியை தீவிரமாக முன்னெடுத்து வரும் லைகா நிறுவனம் தொடர்ந்து தைவான் தாத்தா மற்றும் சிக்ஸ்பேக் தாத்தா என கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் எடுத்த அவதாரங்களை அடுத்தடுத்து விளம்பரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
தைவான் தாத்தா: வெளிநாட்டில் சைனீஸ் தாத்தா போல இருக்கும் கமல்ஹாசனை அசால்ட்டாக இந்தியன் தாத்தாவ நான் பார்த்து இருக்கேன் என காளிதாஸ் ஜெயராம் சொல்லியதும் மாறுவேஷத்துக்கு உண்டான மரியாதை போச்சேடா என்றே எண்ணத் தூண்டுகிறது. அதன் பின்னர், இந்தியாவுக்கு செல்ல உங்க பாஸ்போர்ட் வேண்டும் என தனது வயதான நண்பரிடம் கமல் கேட்கும் போதே அடுத்து மாறு வேஷத்தில் தான் இவர் பயணிக்கப் போகிறார் என்பதை யூகித்து விட முடிகிறது. அதே போல தைவான் தாத்தாவாக கமல்ஹாசன் கஷ்டப்பட்டு பிராஸ்தெடிக் மேக்கப் எல்லாம் போட்டு விமான நிலையம் வந்தால் பாபி சிம்ஹா அசால்ட்டாக கண்டு பிடித்து விடுவார். அந்த லுக்கை சமீபத்தில் போஸ்டராக வெளியிட்டு தைவான் தாத்தா என்றே லைகா புரமோஷன் செய்தது குறிப்பிடத்தக்கது.
சிக்ஸ்பேக் தாத்தா: ஐ படத்தின் ஜிம் ஃபைட் எஃபெட்டில் இருந்து இன்னமும் வெளியே வராத ஷங்கர் அதே போல ஒரு சண்டைக் காட்சி வைக்கிறேன் என இந்தியன் தாத்தாவை வைத்தும் டிரங்கன் மாஸ்டர் படத்தில் ஜாக்கி சான் சண்டை போடுவது போல தொங்கிப் போன தொப்பையுடன் இந்தியன் தாத்தா சண்டை போடுவார் என்று பார்த்தால் திடீரென வர்மக் கலை மூலமாகவே சிக்ஸ்பேக் கொண்டு வந்து மிரட்டலான சண்டை செய்து அதிர விடுகிறார். படத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட அந்த சண்டைக் காட்சியை வைத்தே தற்போது லைகா நிறுவனம் ப்ரமோட் செய்துள்ளது.
கடுப்பான ரசிகர்கள்: லைகா நிறுவனம் தொடர்ந்து தைவான் தாத்தா, சிக்ஸ்பேக் தாத்தா என ப்ரமோட் செய்து வருவதை பார்த்து கமல் ரசிகர்களே கடுப்பாகி கமெண்ட் போட்டு வருகின்றனர். இந்தியன் 2வை விடுங்க அடுத்து வேட்டையன், விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பொங்கலுக்கு இந்தியன் 3?: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள இந்தியன் 3 படத்தை பொங்கலுக்கே வெளியிட்டு ட்ரோல் செய்தவர்களுக்கு ஷங்கர் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தியன் 3 படம் சூட்டோடு சூடாக வெளியானால் தான் கலெக்ஷன் அள்ளும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











