இந்தியன் 2 ஷூட்டிங்.. போபாலில் இருந்து குவாலியர் கிளம்பிய படக்குழு.. அடுத்து ஃபாரின் தான்!

Recommended Video

BIGG BOSS 3 : Indian-2 to Star Tharshan with Kamal Hassan : இந்தியன் 2 படத்தில் நடிக்கும் தர்ஷன்?

போபால்: இந்தியன் 2 படக்குழு போபாலில் இருந்து குவாலியர் சென்றுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் இந்தியன் 2. சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு சிக்கல்களை தாண்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு

இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது. போபாலில் உள்ள ராஜா போஜ் பாலத்தில் மிக பிரமாண்டமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

சண்டைக்காட்சி

சண்டைக்காட்சி

சுமார் 2000 துணை நடிகர்களை வைத்து, இந்த சண்டைக்காட்சியை பீட்டர் ஹெயின் படமாக்கியுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக இந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

கசிந்த புகைப்படங்கள்

கசிந்த புகைப்படங்கள்

இந்த படப்பிடிப்பில் கமல் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. 90 வயது இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் மிக கம்பீரமாக குதிரை மீது சவாரி செய்யும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வியந்தனர்.

குவாலியர் கோட்டை

குவாலியர் கோட்டை

இந்நிலையில் இந்தியன் 2 படக்குழு தற்போது போபாலில் இருந்து குவாலியர் சென்றுள்ளது. அங்குள்ள மிகவும் பழமையான கோட்டையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 12 நாட்கள் வரை அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்து வெளிநாடு

அடுத்து வெளிநாடு

அதனைத் தொடர்ந்து இந்தியன் 2 டீம் வெளிநாடு பறக்க உள்ளது. முதலில் தைவானில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். பின்னர் ஐரோப்பில் சில காட்சிகளை படமாக்க உள்ளனர்.

இந்தியன் க்ளைமாக்ஸ்

இந்தியன் க்ளைமாக்ஸ்

இந்தியன் முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வெளிநாட்டில் இருந்து தொலைப்பேசி மூலம் கமல் பேசுவார். அது தொடர்பான பிளாஷ் பேக் காட்சிகள் தான் அங்கு படமாக்கப்பட உள்ளன.

பிளாஷ் பேக் காட்சிகள்

பிளாஷ் பேக் காட்சிகள்

சென்னை விமான நிலையத்தில் இருந்து கமல் எப்படி வெளிநாடு தப்பிக்கிறார்?, அங்கு அவருக்கு யார் ஆதரவு தருகிறார்கள்? மீண்டும் அவர் இந்தியா வர முடிவு எடுப்பது ஏன்? என்பது உள்ளிட்ட காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளன. அதன் பிறகு இந்தியாவில் மீண்டும் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X