Shankar: பை பை தாய்பெய்.. இந்தியன் 2 படத்தின் தாய்லாந்து சூட்டிங்கை நிறைவு செய்த ஷங்கர்!

சென்னை உள்ளிட்ட இடங்களில் சூட்டிங்கை நிறைவு செய்த இந்தியன் 2 படக்குழுவினர், தற்போது தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

தற்போது தாய்லாந்தில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்காவிற்கு படக்குழுவினர் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக சென்றுள்ளனர்.

Indian 2 team wrapped up Taiwan shooting and Director Shankar updates about the shooting

இந்தியன் 2 சூட்டிங் :நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் 4 ஆண்டுகளுக்கு முன்பே சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், சூட்டிங்கின்போது நடந்த விபத்து உள்ளிட்ட காரணங்களால் படம் முடங்கியது. தற்போது விக்ரம் படத்தின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படம் மீண்டும் தூசித்தட்டி எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, திருப்பதி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது வெளிநாட்டில் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. தாய்வானில் படத்தின் சூட்டிங் கடந்த 4 நாட்களாக எடுக்கப்பட்ட நிலையில், அங்கு தற்போது சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவினர் தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் அப்டேட் தெரிவித்துள்ளனர்.

Indian 2 team wrapped up Taiwan shooting and Director Shankar updates about the shooting

பை பை தாய்பெய் என்று இயக்குநர் ஷங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூறியுள்ளார். முன்னதாக கமல்ஹாசனின் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்து, போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட உள்ளனர்.

Indian 2 team wrapped up Taiwan shooting and Director Shankar updates about the shooting

தென்னாப்பிரியாவில் ட்ரெயின் ஆக்ஷன் காட்சிகளை எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆக்ஷன் காட்சி சர்வதேச தரத்தில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தென்னாப்பிரிக்காவில் இரண்டு வாரங்களுக்கு இந்த ஷெட்யூல் நீடிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிதும் இடைவெளியின்றி தென்னாப்பிரிக்காவில் தொடர்ந்து சூட்டிங்கை நடத்தி முடிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே படக்குழுவினர் தாய்பெய்யிலிருந்து தென்னாப்பிரிக்கா செல்வதற்காக விமானநிலையத்தில் காத்திருந்த வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் சூட்டிங்கை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் இந்தியன் 2 படக்குழுவினர் தொடர்ந்து ஐதராபாத், சென்னை மற்றம் தனுஷ்கோடியிலும் அடுத்தடுத்த கட்டங்களில் சூட்டிங்கை திட்மிடடுள்ளனர். இந்தப் படம் மீண்டும் கமல் நடிப்பில் இன்டஸ்ட்ரியல் ஹிட்டாகும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X