இந்தியன் 2 படத்தில் ப்ரியா பவானிசங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ்?: அய்யோ காஜல் பாவம்
Recommended Video
சென்னை: இந்தியன் 2 படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோரும் நடிக்கிறார்களாம்.
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் காஜல் அகர்வால் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ப்ரியா பவானி சங்கரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம்.
ப்ரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் படம் முழுக்க வருமாம்.

படப்பிடிப்பு
இந்தியன் 2 படம் கைவிடப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை மீண்டும் துவங்குகிறார்கள். ஆகஸ்ட் 19ம் தேதி மீண்டும் படப்பிடிப்பு துவங்குகிறதாம். ஐஸ்வர்யா ராஜேஷ் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பில் அசத்திவிடுவார். ப்ரியா பவானி சங்கர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவார்.

காஜல் அகர்வால்
இந்தியன் 2 படத்தில் நாம் மட்டும் தான் என்று நினைத்த காஜல் அகர்வாலுக்கு பாவம் இந்த தகவல் அதிர்ச்சி அளிக்கும். ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பதால் காஜலை விட பெயர் வாங்கிவிடுவார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. காஜல் அகர்வாலும் தனது நடிப்புத் திறனை மேம்படுத்தி சிறப்பாக நடித்து வருகிறார். இருப்பினும் அவர் நடிப்பை குறை சொல்வதற்கு என்றே பெரிய கூட்டம் உள்ளது. இந்நிலையில் தான் இந்தியன் 2 படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆர்வம்
இந்தியன் படத்தில் சுகன்யாவை பாட்டி போன்று காட்டினார்கள். இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலை அப்படி காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது. இதை காஜல் ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ப்ராஸ்தெடிக் மேக்கப் போட்டு நடிக்க காஜல் ஆர்வமாக உள்ளார்.

கமல் ஹாஸன்
முன்னதாக பட்ஜெட் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டபோது ஷங்கரும், கமலும் சேர்ந்து தான் லைகா நிறுவனத்தை சமாதானம் செய்து படத்தை தயாரிக்க வைத்துள்ளார்கள். லைகா ஒத்து வரவில்லை என்றால் வேறு தயாரிப்பாளரை தேட வேண்டும் என்ற முடிவுக்கு ஷங்கர் வந்த நிலையில் தான் சமரசம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











