தாத்தா வராறே.. விரல சுழட்ட போறாரே.. இந்தியன் 2 ட்ரெய்லர் அப்டேட்.. வெயிட்டிங்கில் ரசிகர்கள்

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் இந்தியன் 2 அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் கமலுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கிறது படம்.இந்தச் சூழலில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து உற்சாகமடைந்த அவர்; இந்தியன் 2 பட பணிகளை தூசு தட்டினார். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. பிறகு லைகாவுடன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்துகொள்ள படத்தின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

Kamal Haasan Indian 2 2

விறுவிறு ஷூட்டிங்: அதனையடுத்து இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் படத்தின் ஷூட்டிங் நடந்தது. இந்தப் படத்தின் முதல் பாகம் எப்படி மிகப்பெரிய வெற்றி பெற்றதோ அதேபோல் இதனையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ஷங்கரும், கமல் ஹாசனும் மும்முரமாக உழைத்தார்கள். இடையே வசந்தபாலனும் படத்தின் சில காட்சிகளை ஷூட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரவேற்பை பெற்ற டீசர்: படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் வழக்கமான ஷங்கர் டெம்ப்ளேட்டுக்குள்தான் படம் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பினார்கள். அதேசமயம் படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது என்றும்; நிச்சயம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்றும் கமலின் ரசிகர்களும், ஷங்கரின் ரசிகர்களும் ஓபன் ஸ்டேட்மெண்ட்டை சமூக வலைதளங்களில் விட ஆரம்பித்தனர்.

இசை வெளியீட்டு விழா: இந்தச் சூழலில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சில வாரங்களுக்கு பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கமல் ஹாசன், ஷங்கர், சுபாஸ்கரன், அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். கமல் ஹாசன் தொப்பி அணிந்தபடி கறுப்பு நிற உடையில் அட்டகாசமாக வந்திருந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் அட உலக நாயகன் வயது ஏற ஏற அழகாகிக்கொண்டே போகிறாரே என்று புகழ்ந்து தள்ளினர். படத்தின் பாடல்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கின்றன.

ட்ரெய்லர் ரிலீஸ்: இந்நிலையில் படமானது அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இதனையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடு பிடித்துள்ளன. மேலும் இந்தியன் 2 ட்ரெய்லர் எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு நிலவிவந்தது. அதன்படி ட்ரெய்லரானது இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதன் நேரம் மாறியிருக்கிறது. அந்தவகையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் லைகா நிறுவனம் அறிவித்திருக்கிறது. அந்தப் போஸ்டரில் கமல் ஹாசன் வயதான கெட்டப்பில் ஊதா நிற தொப்பி அணிந்தபடி ஸ்டைலாக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X