வெறியோடு சுற்றும் கமல் ரசிகர்கள்.. இந்தியன் 2 ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..!
சென்னை: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்றாலே அது இயக்குநர் ஷங்கர்தான். இவரது படங்களின் கதைக்கேற்ற திரைக்கதையும் அந்த திரைக்கதைக்கேற்ற பிரம்மாண்டமும் இவரது பலமாக இன்று வரை இருந்து வருகிறது. இவரது இயக்கத்தில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் இந்தியன் 2. லைகா புரெடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
1996ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளிவந்து பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்க, கமல் ஹாசன் நடிப்பில் படம் உருவாகி ரிலீசுக்காக காத்துக்கொண்டு உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த, பாடலாசிரியர் பா விஜய் எழுத்தில் உருவாகியிருந்த மாறா பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. சென்னையில் நடைபெற்ற பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவில் பல முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ட்ரைலர் ரிலீஸ்: படத்தில் இடம்பெற்றுள்ள தாத்தா வாராறே பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் இந்தியன் படத்தின் ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். ஏற்கனவே படத்தின் டீசர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. படம் வெளியாக இன்னும் ஏறக்குறைய 20 நாட்கள் மட்டுமே இருப்பதால் படக்குழு தீவிரமான புரோமோஷனில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் 25ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தனி அப்டேட்: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ட்ரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதைப்போல் தெரிகின்றது. அறிவிப்பும் அப்படித்தான் இருக்கின்றது. மேலும் 25ஆம் தேதி எப்போது ட்ரைலர் ரிலீஸ் செய்யப்படும் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை. அதாவது எந்த நேரத்தில் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்படவில்லை. எனவே இதற்கு தனியாக படக்குழு அப்டேட் கொடுக்க வாய்ப்புள்ளது.

குஷியில் கமல் ரசிகர்கள்: உலக நாயகன் கமல் ஹாசன் கல்கி 2898 ஏ.டி திரைப்படம் வரும் 27ஆம் தேதியும், இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் 12ஆம் தேதியும் ரிலீசாகவுள்ளதால், உலக நாயகன் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு மிகவும் பிரமாண்டமான திரை விருந்து காத்திருக்கின்றது என்றே கூறலாம். அதாவது கிட்டத்தட்ட இரண்டு வார இடைவெளியில் கமல் ஹாசன் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால் உலக நாயகனின் ரசிகர்கள் ஏகப்பட்ட குஷியில் உள்ளனர்.
கல்கி 2898 ஏ.டி: நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 ஏ.டி படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் உள்ள மிகப்பெரிய ஸ்டார்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், நடிகர்களுக்கான சம்பளத்திற்கே அதிகப்படியான பொருட்செலவை தயாரிப்பு நிறுவனம் செய்துள்ளது. கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸுடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், உலக நாயகன் கமல்ஹாசன், அதிரடிக்கு பெயர்போன நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் இரண்டு ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











