ஒரு மாசத்துக்கு கன்டென்ட் சிக்கிடுச்சு.. இந்தியன் 2வை ட்ரோல் செய்யும் ஃபேன்ஸ்.. குவியும் மீம்ஸ்!
சென்னை: கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ரசிகர்களாலே ஜீரணிக்க முடியாத அளவுக்கு இந்தியன் 2 படத்தை லைகாவின் பணத்தை எந்தளவுக்கு வீணடிக்க முடியுமோ அந்தளவுக்கு வீணடித்து விளையாடியிருக்கிறார் ஷங்கர் என சோஷியல் மீடியாவில் ரசிகர்களே மீம் போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.
இந்தியன் 2 படத்தை இப்படி எடுத்து வைத்து விட்டு அதற்கு மேலும், உலகளவில் புரமோஷன் செய்தது எல்லாம் உச்சகட்ட மோசடித்தனம் என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பரிதாபங்கள் டீமுக்கு ஒரு மாசத்துக்கான கன்டென்ட் சிக்கிடுச்சு உள்பட ஏகப்பட்ட மீம்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. பொதுவாக ஹேட்டர்கள் தான் இதுபோல செய்வார்கள் என்கிற நிலை தாண்டி இந்த முறை ரசிகர்களே செய்வது தான் ஆச்சர்யமாக உள்ளது என்கின்றனர்.
கொந்தளித்த ரசிகர்கள்: 6 ஆண்டு கால போராட்டத்தில் ஒரு படம் வெளியானால் கண்டிப்பாக இதுபோலத்தான் இருக்கும் என்றும் ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பது போல இந்தியன் 2 படத்தை ஆரம்பித்த வேகத்திலேயே எடுத்து இருந்தால் கூட அந்த படம் தப்பித்து இருக்கும் என்றும் பேஸ்புக்கில் இருந்து ரசிகர்கள் எக்ஸ் தளத்திற்கும் அதை விட அட்வான்ஸாகவும் சென்று விட்ட நிலையில், ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ரசிகர்களுடன் படம் கனெக்ட் ஆகவில்லை. அதையெல்லாம் மறந்து விட்டாலும் இந்தியன் தாத்தா வர்மக் கலை மூலம் சிக்ஸ் பேக் வைக்கும் காட்சியெல்லாம் ஸ்பூஃப் மூவியில் கூட வைக்க மாட்டார்கள் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
75 வயதிலேயே: இந்தியன் படத்தில் 75 வயது நிரம்பிய தாத்தாவாக சேனாபதி கதாபாத்திரத்தை ஷங்கர் உருவாக்கி இருப்பார். அந்த சேனாபதி அதிகம் பேசமாட்டார். அவர் செய்யும் ஆக்ஷன் செயல்கள் கூட யதார்த்தமாகவே இருக்கும். கையெழுத்துப் போடும் போது கை நடுங்கும். உடல்மொழி, பாவனை எல்லாம் கமல்ஹாசன் பார்த்து பார்த்து நடித்திருப்பார். ஆனால், அவரை போய் குரளி வித்தை காட்ட வைத்து விட்டாரே ஷங்கர் என படத்தின் இயக்குநரை தான் ரசிகர்கள் திட்டி மீம் போட்டு வருகின்றனர்.
வாயிலேயே பிஜிஎம்: சேனாபதின்னு வாயிலேயே கன்றாவியா ஒரு பிஜிஎம் போட்டுட்டு நீ மட்டும் எங்க நைஸா எஸ்கேப் ஆகப் பார்க்குற என அனிருத்தையும் நெட்டிசன்கள் மீம் போட்டு விளாசி வருகின்றனர். எந்தவொரு பாடலும் ஈர்க்கவில்லை என்றும் பின்னணி இசை ரொம்ப மோசம் என ட்ரோல் செய்துள்ளனர்.
ஒரு மாசத்துக்கு கன்டென்ட்: பரிதாபங்கள் டீமுக்கு ஒரு மாசத்துக்கு கன்டென்ட் கிடைச்சிடுச்சு என்று இன்னொரு மீமையும் போட்டுள்ளனர். ஷங்கர் சார் கதையாக எழுதும் போதே அவரை யாரும் தடுத்து நிறுத்தலையா என்றும் கமல் சார் எப்படி இதற்கு ஓகே சொல்லி உள்ளே வந்தார் என்றும் பாவம் பணம் போட்ட லைகா தான். மணிரத்னம் பொன்னியின் செல்வன் எடுக்கிறேன் என உடைத்த ஃபர்னிச்சர் போதாது என ஷங்கர் இந்தியன் 2வை எடுத்து அதை விட பெரிய ஃபர்னிச்சரை உடைத்து விட்டார் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இந்தியன் 2வே இந்த நிலைமை என்றால் இந்தியன் 3 மற்றும் கேம் சேஞ்சர் படங்களின் நிலை அவ்வளவு தான் அது முடிந்தது என்றும் மீம் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











