ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா?
Recommended Video

சென்னை: இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் தொடர்பாக ஷங்கருக்கும், லைகா நிறுவனத்திற்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஷங்கர் இயக்கிய 2.0 படத்தை அடுத்து இந்தியன் 2 படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. 2.0 படத்திற்கு ரூ. 540 கோடி அளித்த லைகா இந்தியன் 2 பட பட்ஜெட் விஷயத்தில் கறாராக உள்ளதாம்.

ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டை நிர்ணயம் செய்து அதற்குள் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்று லைகா ஷங்கரிடம் தெரிவித்ததாம். குறிப்பிட்ட பட்ஜெட்டில் படம் எடுக்கும் ஆள் இல்லை ஷங்கர்.
இந்த காரணத்தால் ஷங்கருக்கும், லைகாவுக்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். இந்தியன் 2 படம் கிட்டத்தட்ட கைவிடப்படும் நிலையில் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கமல் நடிக்கும் கடைசி படமான இந்தியன் 2-க்கு இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 2.0 படத்தால் அதிக நஷ்டம் ஏற்பட்டதால் இந்தியன் 2 படத்திற்கு ஆடம்பரமாக செலவு செய்யும் நிலையில் இல்லையாம் லைகா.


Click it and Unblock the Notifications











