இந்தியன் 2 அப்டேட்: 85 வயது அமிர்தவள்ளி பாட்டியாக அசத்தும் காஜல் அகர்வால்

Recommended Video

Indian 2 Shooting Spot:நடிகை காஜல் அகர்வால் 85 வயது மூதாட்டியாக நடிக்கிறார்

சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் 85 வயது மூதாட்டியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. சினிமாவில் அறிமுகமானதில் இருந்து இன்று வரையிலும், கவர்ச்சி மற்றும் குறும்புத்தனமான கேரக்டர்களில் மட்டுமே நடித்தவர் காஜல் அகர்வால். இவர், இதற்கு முன்பு எந்த படத்திலும் வயதான தோற்றத்தில் நடித்த அனுபவம் இல்லை. இந்தியன் 2 படத்தில் வயதான மூதாட்டியாக நடிக்கப் போகிறார். காஜல் அகர்வாலுக்கு இப்படத்தில் நடிப்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும்.

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படம் லைகா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், சமுத்திரகனி, ரகுல் பீரித் சிங், ப்ரியா பவானி சங்கர், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Indian 2 Update : Kajal Aggarwal play 85 year old lady character in Indian 2

இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிரூத். அனிரூத் முதன் முதலாக ஷங்கர் படத்திற்கு இசையமைக்கிறார். ஷங்கர் முதன் முதலாக இயக்குநராக களமிறங்கிய ஜென்டில்மேன் படம் முதல் 2.0 திரைப்படம் வரை ஏ.ஆர்.ரகுமானுடனேயே பணியாற்றி இருக்கிறார்.

ஷங்கர் படத்தில் மட்டும் தான் பாடல் காட்சிகளும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும். இதனால் தான் ஷங்கர் படங்களில் பாடல் காட்சிகளில் யாரும் கட் அடித்து விட்டு யாரும் வெளியில் செல்வதில்லை. அப்படி சிறந்த பாடல்களையே ஷங்கர் தனது படத்தில் கொடுத்து வருகிறார்.

இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக, இடையில், அந்நியன் மற்றும் நண்பன் படங்களுக்கு மட்டும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். இவ்விரண்டு படங்களின் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று ஹிட்டாகின. இருந்தாலும், தன்னுடைய படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானையே பயன்படுத்தி வந்தார்.

ஆனால், இந்தியன் 2 படத்திற்கு இசையமைப்பாளராக, இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தமான அனிருத்தை பயன்படுத்தியுள்ளார். அனிருத் தான் இசையமைத்த அனைத்து பாடல்களையுமே ஹிட் ஆக்கியவர். இதனால் தான் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இவ்விருவரின் காம்போ எப்படி இருக்கும் என்பது படம் வெளியான பின்னர் தான் தெரியவரும்.

Indian 2 Update : Kajal Aggarwal play 85 year old lady character in Indian 2

தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. படத்திற்கான சண்டை காட்சிகள் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டை காட்சியை வடிவமைத்து வருகிறார் பீட்டர் ஹைன். இந்த சண்டை காட்சி 2000 ஆட்களுடன் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சண்டை காட்சிக்கு மட்டும் சுமார் 40 கோடி ரூபாய் செலவாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் 90 வயது முதியவராக, அதே சேனாதிபதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

இப்படத்தில், சேனாதிபதிக்கு ஜோடியாக அமிர்தவள்ளி கதாபாத்திரத்தில், காஜல் அகர்வால் 85 வயது மூதாட்டியாக நடிக்கவுள்ளார். காஜல் அகர்வால் இதற்கு முன்பு எந்த படத்திலும் வயதான தோற்றத்தில் நடித்த அனுபவம் இல்லை. அறிமுகமானதில் இருந்து இன்று வரையிலும், கவர்ச்சி மற்றும் குறும்புத்தனமான கேரக்டர்களில் மட்டுமே நடித்தவர்.

எனவே, இந்தியன் 2 திரைப்படம் காஜல் அகர்வாலுக்கு முற்றிலும் மாறுபட்ட படமாக அமையும் என்பது உறுதி. இந்தியன் படத்தில் சேனாதிபதியின் ஜோடியாக சுகன்யா நடித்திருந்தார். இந்தியன் 2 திரைப்படத்தில் சுகன்யாவிற்கு பதிலாக காஜல் அகர்வால் வயதான தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இது காஜல் அகர்வாலுக்கும் அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X