Sakshi Agarwal: மேடம் பேண்ட் போடல... சட்டை மட்டும் அணிந்து சாக்ஷி அகர்வால் கொடுத்த போஸ்!
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் வெறும் ஷர்ட் அணிந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சோஷியல் மீடியாவில் விதவிதமான ரீல்ஸ், கவர்ச்சி போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் சாக்ஷி.
ஏராளமான ரசிகர்களை கொண்டவர்தான் சாக்ஷி அகர்வால், எந்த புகைப்படத்தை ஷேர் செய்தாலும், அதற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து விடுகின்றன.

சாக்ஷி அகர்வால்: ரசிகர்களின் பேராதரவை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில், பல்வேறு நடிகைகள் கலந்து கொண்டனர். அதேபோல ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த லிஸ்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சயமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால்.
மாடலிங்கில் ஆர்வம்: வட மாநிலத்தைச் சேர்ந்த சாக்ஷி அகர்வால், சிறுவயது முதலே மாடலிங் துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார். பல தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு சினிமா வாய்ப்பை தேடி அலைந்த சாக்ஷிக்கு அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்தடுத்த படங்களில்: அதன் பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுக்கு தோழியாகவும் நடித்திருந்தார். அதன் பின் டெடி, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால் அண்மையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

என்ன சாக்ஷி இதெல்லாம்: இந்நிலையில் சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் ஷர்ட் மட்டும் அணிந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இதயத்தை பரிசாக கொடுத்து வந்தாலும், சில பேன்ஸ், மேடம் பேண்ட் போடல என்றும், என்ன சாக்ஷி இதெல்லாம் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications