twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' படத்தால் இந்திய ராணுவத்திற்கே பெருமை.. ராணுவ அதிகாரிகள் பாராட்டு

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' விமர்சனம் , பாக்ஸ் ஆபீஸ் வசூல்...வீடியோ

    சென்னை : அல்லு அர்ஜூன், அனு இமானுவேல், அர்ஜூன், சரத் குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் 'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என்ற பெயரில் தமிழில் வெளியாகி இருக்கிறது.

    வி.வம்சி இயக்கத்தில் தேசபக்தியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜூன் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளாலும், வசனங்களாலும் தேசபக்தி ஊட்டியிருக்கும் அல்லு அர்ஜூனுக்கு ராணுவ அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    Indian army officials praises en peyar surya en veedu india movie

    இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள் 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' படம் இந்திய ராணுவத்தின் பெருமை எனக் கூறி பாராட்டியுள்ளனர். இந்திய ராணுவம் பற்றி நேர்மையாக எடுக்கப்பட்ட படம் என வாழ்த்தியுள்ளனர். இதற்காக, படக்குழுவினர் கலந்துகொண்ட பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ராணுவ அதிகாரிகள் படத்தின் இயக்குநரையும், படத்தில் நடித்த அல்லு அர்ஜூனையும் பாராட்டியுள்ளனர்.

    'ராணுவ வீரனாக நடித்திருப்பது தனக்கு கிடைத்த பெருமை. இளைஞர்கள் நாட்டுக்காக இந்திய ராணுவத்தில் சேர வேண்டும்' என ஹீரோ அல்லு அர்ஜூன் கூறியுள்ளார். இந்தப் படம் வெளியான முதல் நாளே 40 கோடி ரூபாய் வசூல் செய்தது.

    வீக்கெண்ட் முடிவில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' படம். தமிழகத்தில் 'அவென்ஜர்ஸ்', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படங்களுக்குப் பிறகு இந்த வாரத்தில் அதிக வசூல் குவித்த படமாக இருக்கிறது 'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' தேசபக்தி திரைப்படம்.

    English summary
    Indian army officials praises 'Naa peru surya naa illu india' as pride of indian army.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X