என்னோட பேவரிட் ஹீரோ எப்பவுமே அவர்தான்.. பிவி சிந்து யாரை கைக்காட்டியிருக்காங்க தெரியுமா?

ஐதராபாத் :பேட்மிண்டன் வீராங்களை பிவி சிந்து இந்த ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.

Recommended Video

கணவர் வாங்கித்தந்த முதல் சாரங்கி | Sarangi Player Manonmani p-03| சாரங்கி மனோன்மணி| Filmibeat Tamil

பேட்மிண்டனில் மட்டுமில்லாமல் இவர் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

அவ்வப்போது பிரபலமான பாடல்களுக்கு ஆட்டம் போட்டு அதை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பிவி சிந்து.

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, இந்தியாவிற்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று ஆடி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற காமென்வெல்த் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார். இதையொட்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

அமைச்சர் ரோஜாவுடன் சந்திப்பு

அமைச்சர் ரோஜாவுடன் சந்திப்பு

இரு தினங்களுக்கு முன்பு ஆந்திர அமைச்சர் ரோஜாவையும் மரியாதை நிமித்தமாக குடும்பத்துடன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகாவும் இருந்தார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படுகிறார் பிவி சிந்து. இவர் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பிரபல பாடல்களுக்கு ஆட்டம் போட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். போட்டோஷுட்களையும் எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

அந்த வகையில் இவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தனக்கு பிடித்தமான ஹீரோ குறித்து பேசியுள்ளார் பிவி சிந்து. அந்தப் பேட்டியில் அவருக்கு பிடித்தமான டோலிவுட் ஹீரோ குறித்து கேள்வி கேட்கப்படுகிறது.

பிவி சிந்துவிற்கு பிடித்த ஹீரோ

பிவி சிந்துவிற்கு பிடித்த ஹீரோ

இதற்கு உற்சாகமாக பதிலளித்த பிவி சிந்து, முதலில் தனக்கு அனைவரையும் பிடிக்கும் என்று கூறுகிறார். தொடர்ந்து கேள்வி கேட்பவர் ஒருவரைத்தான் கூற வேண்டும் என்று குறிப்பிட, அல்லு அர்ஜுன் தான் தனக்கு பிடித்தமான ஹீரோ என்று கூறுகிறார் பிவி சிந்து. டோலிவுட்டில் அனைவரையும் கவர்ந்த ஹீரோவாக அல்லு அர்ஜுன் உள்ளது இதன்மூலம் தெரியவருகிறது.

சிறப்பான ஹீரோ

சிறப்பான ஹீரோ

அல்லு அர்ஜுன் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் அலா வைகுந்தபுரமுலு படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இந்தப் படத்தில் புட்டமொம்மா பாடலுக்கு அல்லு அர்ஜுனும் பூஜா ஹெக்டேவும் போட்ட ஆட்டம் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றது.

புஷ்பா2 படத்தின் சூட்டிங் துவக்கம்

புஷ்பா2 படத்தின் சூட்டிங் துவக்கம்

தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான புஷ்பா படம் மிரட்டியது. இந்தப் படம் சர்வதேச அளவில் சிறப்பான கலெக்ஷனை பெற்றது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் துவங்கியுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X