ஷாருக்கான் முதல் விஜய் வரை.. சினிமாவில் பிரபலங்கள் அடித்த சூப்பர் கிஸ்.. டிரெண்டாகும் #KissDay

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு இன்று கிஸ் டே கொண்டாடப்படுகிறது.

காதலர் தினத்தை ரோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, புரபோஸ் டே, ஹக் டே, கிஸ் டே என ஒரு வாரத்துக்கு கொண்டாடி வருகின்றனர்.

இந்திய சினிமா பிரபலங்கள் அடித்த சூப்பரான கிஸ் போட்டோக்களை ரசிகர்கள் #KissDay என்கிற ஹாஷ்டேக்கில் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மாஸ்டர் கிஸ்

மாஸ்டர் கிஸ்

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், தளபதி விஜய்க்கு விஜய்சேதுபதி அடித்த மாஸ்டர் கிஸ் புகைப்படத்தை வெளியிட்டு கிஸ் டேவுக்கான பர்ஃபெக்ட் போட்டோ இது தான் என விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். ரசிகர்களுடன் முத்தத்தை பகிர்ந்து கொள்ளும் நடிகராக விஜய்சேதுபதி வலம் வருவது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யும் விஜய்சேதுபதிக்கு முத்தம் கொடுத்து கலக்கினார்.

ஷாருக்கான் லிப் லாக்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு கொடுத்த ஹாட் லிப் லாக் கிஸ் வீடியோவை வைரலாக ஷேர் செய்து பாலிவுட் ரசிகர்கள் கிஸ் டேவை வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். மேலும், ஏகப்பட்ட ஷாருக்கான் முத்த போட்டோக்களும் வைரலாகி வருகின்றன.

ஐஸ்வர்யா ராய் ஹாட் கிஸ்

தூம் 2 திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தக் காட்சியையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். ஹிரித்திக் ரோஷன் ஐஸ்வர்யா ராய்க்கு கொடுத்த ஹாட் லிப் கிஸ்க்கு ஏகப்பட்ட லைக்குகளும் குவிந்து வருகின்றன. இதையெல்லாம் பார்த்தா முரட்டு சிங்கிள்ஸ் நிலைமை என்னாகும் என தெரியாமல் இப்படி படுத்துறீங்களே என ட்ரோல் மீம்களும் பறக்கின்றன.

காஜல் கிஸ்

முத்தத்திற்கு மொழியேது அனைத்து மொழி திரைப்படங்களிலும் லிப் லாக் முத்தக் காட்சிகளை பிரபல நடிகர்கள் முதல் புதுமுகங்கள் வரை நடித்துத் தள்ளி உள்ளனர். ஆர்யா 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு லிஃப்டில் வைத்து அல்லு அர்ஜுன் கொடுக்கும் இந்த சூடான உதட்டு முத்தம் வேற லெவல்.

குஷி கிஸ்

குஷி, நண்பன், தெறி, அழகிய தமிழ் மகன் என ஏகப்பட்ட படங்களில் தளபதி விஜய் அடித்த சூப்பர் கிஸ் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து கிஸ் டேவை காதல் ஜோடிகள் கொண்டாடி வருகின்றனர். சிங்கிள்ஸ் பாவம் உங்களை சும்மா விடாது என்றும் கமெண்ட்டுகள் மீம்கள் களைகட்டி வருகின்றன.

கடுப்பாகும் கொரோனா

கடுப்பாகும் கொரோனா

கொரோனாவுக்கு பிறகு கை கொடுப்பதையே பலரும் தவிர்த்து வரும் நிலையில், இப்படி முத்த தினமாடா கொண்டாடுறீங்க என கொரோனா பார்ப்பது போலவும் ஏகப்பட்ட மீம்களை போட்டு முரட்டு சிங்கிள்கள் முத்த தினத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். வருவது வரட்டும் என எதை பற்றியும் கண்டு கொள்ளாமல் காதலர்கள் முத்த தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X