கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!

சென்னை: நாடு முழுவதும் 72வது குடியரசு தினம் தேசியக் கொடியை ஏற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Recommended Video

தேசப்பற்றில் சினிமாவின் பங்கு | Mrs. JAYANTHI KANNAPPAN CHAT | REWIND RAJA EP-38 | FILMIBEAT TAMIL

மறுபுறம் இரண்டு மாதங்களாக போராடி வந்த விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

அமிதாப் பச்சன், சிம்ரன், பார்த்திபன், ஹரிஷ் கல்யாண் என ஏகப்பட்ட பிரபலங்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

அமிதாப் பச்சன் வாழ்த்து

அமிதாப் பச்சன் வாழ்த்து

நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள 3794வது ட்வீட்டாக குடியரசு தின ட்வீட் அமைந்துள்ளது. சந்தோஷம், அமைதி மற்றும் மகிழ்ச்சி நாட்டு மக்களிடையே பரவட்டும். அனைவரும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இந்த காலக் கட்டத்தில் இருக்க வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ளார்.

கொடியுடன் சிம்ரன்

கொடியுடன் சிம்ரன்

நடிகை சிம்ரன், காலையிலேயே தேசிய கொடியேற்றும் விழா ஒன்றில் கலந்து கொண்டு, தேசியக் கொடிக்கான மரியாதையை செலுத்தி உள்ளார். மேலும், கையில் மிகப்பெரிய தேசியக் கொடியை ஏந்தி, வெள்ளை, பச்சை மற்றும் காவி நிற சுடிதாரை அணிந்து கொண்டு அழகாக கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

கொடி நாட்டுவோம்

கொடி நாட்டுவோம்

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் "கொடி நாட்டுவோம்... உலக அரங்கில் இந்தியப் பெருமையையும், இந்தியாவில் தமிழனின் பெருமையையும் இதயத்தில் மனிதத்தையும்!" என அழகான கொடி கவிதையுடன் குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறார்.

கலர் கலரா துப்பட்டா

நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு "ஹேமேரா இந்தியா" என்ற பாடலுடன் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், வெள்ளை நிற சுடிதாரை அணிந்திருக்கும் ஷெரின், காவி, பச்சை மற்றும் நீல நிற துப்பட்டாக்களை மாற்றி மாற்றி போட்டுக் கொண்டு வணக்கம் தெரிவித்து அசத்துகிறார்.

ஹரிஷ் கல்யாண் வாழ்த்து

ஹரிஷ் கல்யாண் வாழ்த்து

அனைவருக்கும் 72வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள் என நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் ஏகப்பட்ட இந்திய சினிமா பிரபலங்கள் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X