twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனிதாபிமானமற்ற செயல்.. கங்கனா ரனாவத் முதல் ஜெயம் ரவி வரை..வலுக்கும் குரல் #JusticeForJeyarajAndFenix

    |

    சென்னை: இது மனிதாபிமானமற்ற செயல் என சாத்தன்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக பல பிரபலங்களும் தங்களின் எதிர்ப்பு குரலை கொடுத்து வருகின்றனர்.

    Recommended Video

    Vijay & MaheshBabu in Ponniyin Selvan? | Maniratnam, Suhasini

    #JusticeForJeyarajAndFenix என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயம் ரவி, இசையமைப்பாளர் இமான், பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் என பலரும் தங்கள் எதிர்ப்பு கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    காலைத் தூக்கி கைக்குள் விட்டு.. இது என்ன வகை யோகான்னு தெரியலையே.. வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!காலைத் தூக்கி கைக்குள் விட்டு.. இது என்ன வகை யோகான்னு தெரியலையே.. வைரலாகும் பிரபல நடிகை போட்டோ!

    அநியாயமாக

    அநியாயமாக

    சாத்தான்குளத்தில் கூடுதல் நேரமாக கடை திறந்து வைத்த குற்றத்திற்காக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும், அடித்துக் கொல்லப்பட்டதாக மக்கள் மற்றும் குடும்பத்தினர் கொந்தளித்து வருகின்றனர். நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்து வருகிறது.

    ஜெயம் ரவி கண்டனம்

    ஜெயம் ரவி கண்டனம்

    இந்த மனிதத்தன்மையற்ற செயலை செய்தது யாராக இருந்தாலும், சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்திற்கு கீழ் தான் அனைவரும், யாருமே சட்டத்தை கடந்தவர்கள் இல்லை, என #JusticeForJeyarajAndFenix என்ற ஹாஷ்டேக்கை டேக் செய்து நடிகர் ஜெயம் ரவி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    இதை டிரெண்ட் செய்யுங்க

    இதை டிரெண்ட் செய்யுங்க

    நடிகர் சாந்தனு, தனது டிவிட்டர் பக்கத்தில், "ரசிகர்களாகிய நாம் சமூக ஊடகங்களில் பல விஷயங்களை ட்ரெண்ட் செய்கிறோம்! இந்த குடும்பத்திற்கு நீதி தேவை! இது வைரல் ஆகணும் சூப்பர் ஸ்டார், உலகநாயகன், தல, தளபதி, விக்ரம் மற்றும் அனைத்து நட்சத்திரங்களின் ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    வைரஸை விட மோசமானவர்கள்

    வைரஸை விட மோசமானவர்கள்

    சாத்தன்குளத்தில் நடந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. மனித இனத்திற்கே வெட்கக் கேடான விசயம். குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த காவலர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் அப்போதுதான் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையும். வைரஸை விட இதுபோன்ற சில மனிதர்கள் ரொம்ப மோசமானவர்கள் என கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளார்.

    இமான் கண்டனம்

    இமான் கண்டனம்

    இசையமைப்பாளர் இமானும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் கொல்லப்பட்ட செய்தியை கேட்டு மனமுடைந்து போனேன். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுரமான செயலை அனைத்து இந்தியர்களும் கண்டிக்க வேண்டும். இவர்கள் இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்டு என கொதித்தெழுந்துள்ளார்.

    குஷ்பு கண்டனம்

    குஷ்பு கண்டனம்

    எந்த ஒரு தாமதமும் இன்றி, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும், தாமதிக்கப்படும் நீதி, அநீதிக்கு சமமானது, அந்த குற்றவாளிகள் இந்த விவகாரத்தில் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாதபடி அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என நடிகை குஷ்பு தனது கோபத்தை வெளிப்படுத்தி டிவீட் செய்துள்ளார்.

    மன்னிப்பு கேட்கணும்

    மன்னிப்பு கேட்கணும்

    நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான காஜல் பசுபதி தனது டிவிட்டர் பக்கத்தில், நீதியும் இல்லை, அமைதியும் இல்லை என பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸுக்கு இரங்கல் தெரிவித்த அவர், ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு போலீஸார் மன்னிப்பு கேட்டதை போல, இங்கேயும் போலீஸ் அதிகாரிகள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    கங்கனா கண்டனம்

    கங்கனா கண்டனம்

    இன்னும் சில காவலர்கள் தங்கள் கைகளிலேயே சட்டத்தை எடுத்துக் கொண்டு, இஷ்டத்துக்கு கொடூரமான செயல்களை ஆற்றி வருகின்றனர். நிச்சயம் இது தண்டிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவத்தை செய்ய அவர்கள் அச்சப்பட வேண்டும் என #JusticeForJeyarajAndFenix என்ற ஹாஷ்டேக்கில் தனது கண்டனத்தை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பதிவு செய்துள்ளார்.

    English summary
    Indian Celebrities like Kangana Ranaut, Jaym Ravi, Karthik Subbaraj, Khushbu, Pa Ranjith and so many others also support to #JusticeForJeyarajAndFenix and they need justice for their brutal murder.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X