மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவனை வழிபடும் இந்திய சினிமா பிரபலங்கள்.. வேற லெவல் டிரெண்டிங்!

சென்னை: மகாசிவராத்திரி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சினிமா பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் மகாசிவராத்திரியை முன்னிட்டு வெளியிட்டுள்ள போஸ்ட்கள் வைரலாகி வருகின்றன.

ஹாஷ்டேக் #Mahashivratri என்கிற ஹாஷ்டேக் உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

தனுஷ் வழிபாடு

தனுஷ் வழிபாடு

மகாசிவராத்திரியை முன்னிட்டு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓம் நமசிவாயா என பதிவிட்டு மகாசிவராத்திரி வழிபாட்டை ஆரம்பித்துள்ளார். வீட்டில் இருக்கும் சிவன் மற்றும் நந்தி சிலை புகைப்படத்தையும் ரசிகர்கள் மத்தியில் ஷேர் செய்துள்ளார் தனுஷ்.

பூஜை செய்யும் கங்கனா

பூஜை செய்யும் கங்கனா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படத்தின் ரிலீசை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் மகாசிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், சிவலிங்கத்துக்கு பூஜை செய்யும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

மோகன் லால் வாழ்த்து

மோகன் லால் வாழ்த்து

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவபெருமான் புகைப்படத்தை பதிவிட்டு, அனைவருக்கும் இனிய மகாசிவராத்திரி தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். மோகன் லால் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆத்மிகா ட்வீட்

ஆத்மிகா ட்வீட்

பிரம்மாண்ட சிவ பெருமானின் படத்தை ஷேர் செய்துள்ள நடிகை ஆத்மிகா நம்பிக்கை, அமைதி மற்றும் நேர்மறை சிந்தனைகள் இந்த நன்னாளில் அனைவருக்கும் கிடைக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டு மகா சிவராத்திரி வாழ்த்துக்களை தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

சிவனை பற்றி காஜல் அகர்வால்

சிவனை பற்றி காஜல் அகர்வால்

ஆதியும் அந்தமும் ஆனவர் சிவ பெருமான். என் கோயிலிலும் மனதிலும் இருப்பவர் அவர் தான் என நீண்டதொரு பதிவை இந்தியில் பதிவிட்டு சிவ வழிபாடை நடத்தி வருகிறார் நடிகை காஜல் அகர்வால். சிவராத்திரி தினத்தன்று இரவு கண் விழித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ரகுல் ப்ரீத் சிங் வாழ்த்து

ரகுல் ப்ரீத் சிங் வாழ்த்து

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஈசனின் புகைப்படத்தை பதிவிட்டு அனைவருக்கும் இனிய மகாசிவராத்திரி என வாழ்த்தி உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

பிரபாஸ் ரசிகர்கள்

பிரபாஸ் ரசிகர்கள்

மகாசிவராத்திரியை முன்னிட்டு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரபாஸ் ரசிகர்கள் பாகுபலி படத்தில் சிவ லிங்கத்தை பிரபாஸ் தூக்கிச் செல்லும் காட்சியை பதிவிட்டு மகாசிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X