பிரபலங்களை மண்டை காய வைத்த அந்த ஒரு கேள்வி...யாரு தான் பதில் சொல்றது
மும்பை : கொரோனா லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புக்கள், விளையாட்டு போட்டிகள் என பலவும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
லாக்டவுனில் இணையவாசிகளின் பொழுதை சுவாரஸ்யமாக்க சில கேள்விகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அப்படி அதிகம் பகிரப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பிரபலங்கள் பலரும் பதிலளிக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளனர்.

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பவர்கள் மட்டுமே வெற்றி பெற்றதாக கருதப்படும் இந்த கேள்வி - பதில் போட்டியில் பாடகி சைந்தவி, கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின், நடிகரும் டைரக்டருமான சஞ்சய் பாரதி முதல் நடிகை ஸ்ரதா கபூர் வரை பலரும் முயற்சித்து தோல்வி அடைந்துள்ளனர். பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகரும் இந்த போட்டியில் தோல்வி அடைந்துள்ளார்.
அப்படி என்ன தான் கேள்வி கேட்கப்பட்டது என்றால், நீங்கள் நல்ல தூக்கத்தில், பசியுடன் இருக்கிறீர்கள். உங்களிடம் ஃபிரிட்ஜில் பட்டர், சீஸ், ஜுஸ் உள்ளது. நீங்கள் எதை முதலில் திறப்பீர்கள் என கேட்கப்பட்டுள்ளது.
தனது தோல்வியை ஒப்புக் கொண்ட கரன் ஜோகர், இதிலிருந்து என்ன கற்றுக் கொண்டேன் என்றால், ஒரு போதும் கேலிக்குரிய கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்க கூடாது. அப்படி முயற்சித்தால் நாள் முழுவதும் அதிலேயே சென்று விடும் என கருத்து பதிவிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு இதே போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. தற்போது சில வாரங்கள் முன்பிருந்து மீண்டும் இந்த கேள்விகள் அதிகம் பகிரப்பட்டு, பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications











