twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது தேவையில்லாத ஆணி தானா.. வரம்பு மீறுகிறதா சென்சார் போர்ட்?

    |

    மும்பை: சினிமா படங்களை தணிக்கை செய்யும் CBFC எனும் சென்சார் போர்ட் வாரியம், சில சமயங்களில் வரம்பு மீறி செயல்படுகிறதோ என்ற எண்ணம் பலருக்கும் தோன்றியிருக்கும்.

    வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாகவுள்ள ஹாலிவுட் படமான Ford V Ferrari படத்தில் இடம்பெற்றுள்ள மது பாட்டில்களை ப்ளர் செய்த நிலையில், இந்திய சென்சார் போர்ட் ஆணையத்தை பல பிரபலங்கள் நேரடியாக கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.

    பாலிவுட் நடிகரும் இயக்குநருமான ஃபர்ஹான் அக்தர், விரைவில் தியேட்டரில் கதைகளை வாசிக்க வேண்டிய சூழல் உருவாகி விடும் போல என நேரடியாகவே சென்சார் போர்டை தாக்கியுள்ளார்.

    மது பாட்டில்கள் ப்ளர்

    மேட் டேமன், கிறிஸ்டியன் பேல் நடிப்பில் நாளை ரிலீசாகவுள்ள Ford V Ferrari படத்தில் இடம்பெற்றுள்ள மது அருந்தும் காட்சிகள் மற்றும் பார் காட்சிகளில், மது பாட்டில்களை ப்ளர் செய்ய இந்திய சென்சார் போர்ட் உத்தரவிட்டுள்ளதாக வெளியான தகவல் இந்திய படைப்பாளிகளிடம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    மிர்னாலினி வாழ்க்கையில் இணையத்தளம் தான் சினிமாவுடன் இணைத்ததுமிர்னாலினி வாழ்க்கையில் இணையத்தளம் தான் சினிமாவுடன் இணைத்தது

    துப்பாக்கியை ஏன் ப்ளர் செய்யவில்லை

    புகைப்படிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் உடலுக்கு தீங்கானது என தடை போடும் சென்சார் போர்ட், நாயகன் பறந்து பறந்து துப்பாக்கியால் பல பேரை சுட்டு வீழ்த்தும் காட்சியை ஏன் அனுமதிக்கிறது என இந்த நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சின்ன புள்ள தனமா இல்ல

    ஏ சான்றிதழ் வழங்கி 18 வயதுக்கு மேற்பட்டோர் படத்தை பார்க்கலாம்ன்னு சொல்றீங்க, ஆனால், 18 வயதுக்கு மேற்பட்டோர் தானே இது போன்ற விஷயங்களில் சீரழிவார்கள் இது கூட சென்சார் போர்டுக்கு தெரியவில்லையா என்றும், கலையை கலையாக பாருங்கள் என்றும் பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இது நியாயமா

    பல இந்திய திரைப்படங்களில் மது பாட்டில்கள், மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு திடீரென இந்திய தணிக்கை வாரியம் ஏன் இப்படி ஒரு அநீதி செய்கிறது என்றும், இதனால், இந்திய சினிமா குறித்து உலகளவில் என்ன நினைப்பார்கள் என்றும் இந்த நெட்டிசன் கவலைப் பட்டுள்ளார்.

    English summary
    In the upcoming Christian Bale-Matt Damon-starrer, Ford v Ferrari, the CBFC has asked the makers to blur out pictures of alcohol bottles and glasses containing alcohol from the frame.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X