Priya Atlee Pregnant : மீண்டும் கர்ப்பமாக இருக்கும் அட்லீ - பிரியா தம்பதியர்.. பேபி பம்ப் போட்டோவை பாருங்க

சென்னை: இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியர் இந்திய திரையுலகில் மிகவும் கவனிக்கப்படும் தம்பதியர்களாக உள்ளார்கள். இயக்குநர் அட்லீ தற்போது அல்லு அர்ஜுன் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அவரது மனைவி பிரியா பாலிவுட் அளவில் கவனிக்கப்படும் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர்கள் தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Indian Cinemas Lovable Couple Atlee And Priya Atlee Are Again Pregnant Baby Photos Goes Trending
Photo Credit:

இது தொடர்பாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் தாங்கள் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக பகிர்ந்துள்ளனர். இது தொடர்பாக அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " எங்கள் குடும்பத்திற்கு புதிதாக ஒருவர் வரப்போகிறார். இதனால் எங்கள் வீடும் குடும்பமும் அழகாக மாறப்போகிறது. ஆமாம், நாங்கள் மீண்டும் கர்ப்பமாகி விட்டோம். உங்கள் அன்பும் ஆசிர்வாதமும் பிராத்தனையும் வேண்டும். இப்படிக்கு அன்புடன் அட்லீ, பிரியா, மீர், பெக்கி, யூகி, சோக்கி, காபி மற்றும் கூஃபி" என்று தங்களது குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இதில் பிரியா அட்லீ தனது பேபி பம்ப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அட்லீ திரை வாழ்க்கை: அட்லீ மற்றும் பிரியா கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இயக்குநர் அட்லீயைப் பொருத்தவரை இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர். ராஜா ராணி படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று படங்கள் விஜய் உடன் பணியாற்றினார். இவரது இயக்கத்தில் வெளியான நான்கு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி மேல் வெற்றி குவித்ததால், பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் இவரை அழைத்து கதை கேட்டார். அப்படி உருவான படமான ஜவான் படமும் பாக்ஸ் அபீஸில் ரூபாய் 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து வசூல் சாதனை படைத்தது.

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படமான அல்லு அர்ஜுனின் படத்தை இயக்கி வருகிறார். இது சூப்பர் ஹீரோ படம் என்று கூறப்படுகிறது. பிரியா அட்லீ கர்ப்பமாக இருப்பதால் தான் தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X