டோலிவுட் நடிகைகளை வைத்து அமெரிக்காவில் விபச்சாரம் செய்த தயாரிப்பாளர்
சிகாகோ: இந்தியாவை சேர்ந்த தம்பதி தெலுங்கு திரையுலக நடிகைகளை வைத்து அமெரிக்காவில் விபச்சாரம் செய்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த கிஷன் மொதுகுமுடி என்கிற ராஜு என்கிற ஸ்ரீராஜ் சொன்னுப்பட்டி(34) அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் வசித்து வருகிறார். அவருடைய மனைவி சந்திரா(31). அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தொழில் அதிபரான கிஷன் பல ஹிட்டான தெலுங்கு படங்களையும் தயாரித்துள்ளார்.

நடிகைகள்
அமெரிக்காவில் நடக்கும் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பதாகக் கூறி தெலுங்கு திரையுலகில் போராடிக் கொண்டிருக்கும் நடிககைளை வரவழைத்து அவர்களை வைத்து விபச்சார தொழில் செய்துள்ளார் கிஷன்.

ரூ. 2 லட்சம்
அமெரிக்கா அழைத்து வரப்பட்ட நடிகைகளை பாலியல் தொழிலாளிகள் என்று அமெரிக்காவில் விளம்பரம் செய்துள்ளார் கிஷன். அந்த நடிகைகளுடன் உறவு கொள்ள வாடிக்கையாளர்களிடம் தலா ரூ. 2 லட்சம் வாங்கியுள்ளார்.

சந்திரா
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட நடிகைகளை ஒரு சின்ன அபார்ட்மென்ட்டில் அடைத்து வைத்திருந்திருக்கிறார் கிஷன். நடிகைகள் யார், யாருடன் உறவு கொள்ள வைக்கப்பட்டனர் உள்ளிட்ட பல கேவலமான விபரங்களை கிஷனின் மனைவி நோட் போட்டு எழுதி வைத்திருக்கிறார். அந்த நோட்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜாமீன்
சந்திரா, கிஷன் செய்து வந்த தொழில் குறித்து அறிந்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு ஜாமீனும் கிடைக்க முடியாதபடி செய்துவிட்டனர். அவர்களின் குழந்தைகள் வெர்ஜினியாவில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











