கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விவாகரத்து அறிவிப்பு.. கூட்டாக அறிவித்த நட்சத்திர தம்பதி!
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு செர்பிய நடிகை மற்றும் மாடல் நடாஷா ஸ்டான்கோவிக்கை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாகவே இவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து ஹர்திக் மற்றும் நடாஷா இருவருமே மௌனம் காத்து வந்த நிலையில், நடாஷா தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த பாண்டியா என்ற பெயரை நீக்கியதும் சமூக வலைதளங்களில் இருவரும் இணைந்து இருந்த புகைப்படங்களை நீக்கியது உள்ளிட்ட செயல்களால் இவர்களது விவாகரத்து ஏறக்குறைய உறுதியானது. இந்நிலையில் தற்போது இருவரும் கூட்டாக தங்களது பிரிவு குறித்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செர்பியாவை சேர்ந்த நடிகை மற்றும் மாடல் நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ள நிலையில், தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இவர்கள் பிரிய உள்ளதாக கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன. ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா விளையாடிய நிலையில் தொடர்ந்து அவருக்கு போட்டிகளின் போது உற்சாகப்படுத்தும் நடாஷா நேரில் அந்த போட்டிகளில் பங்கேற்கவில்லை.
அடுத்தடுத்த நடவடிக்கைகள்: இதேபோல, தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஹர்திக் பாண்டியா உடனான புகைப்படங்களை அவர் நீக்கினார். இதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் இடையிலான விவாகரத்து ஏறக்குறைய உறுதியானது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய அணி T20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்த போதிலும் நடாஷாவின் ஊக்கம் ஹர்திக்கிற்கு கிடைக்கவில்லை. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை சிறப்பாக வீசி ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்திருந்தார்.
செர்பியா சென்ற நடாஷா: இதையடுத்து நாடு திரும்பிய பாண்டியாவிற்கு அவரது சகோதரர் க்ருணாள் பாண்டியா மற்றும் மகன் அகஸ்தியா உள்ளிட்ட குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஆனால் இதிலும் நடாஷாவை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் மும்பையிலேயே சில காலங்கள் தங்கியிருந்த நடாஷா, தன்னுடைய சொந்த மண்ணான செர்பியாவிற்கு தன்னுடைய மகனுடன் சென்று விட்டார். செர்பியாவை சேர்ந்த நடிகை மற்றும் மாடலான நடாஷா ஸ்டான்கோவிக் விமான நிலையத்தில் தன்னுடைய மகனுடன் சென்ற வீடியோ வெளியான நிலையில், ஹர்திக் -நடாஷா விவாகரத்து உறுதியானது. சில தினங்களிலேயே ஹர்திக் இந்த முடிவை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பு மிகவும் வலுத்தது.
ஹர்திக் -நடாஷா பிரிவு அறிவிப்பு: இந்நிலையில் தற்போது தன்னுடைய விவாகரத்து முடிவை ஹர்திக் பாண்டியா சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ஹர்திக் -நடாஷா இருவரும் கூட்டாக இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இது மிகவும் கடினமான முடிவு என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவை தாங்கள் இருவரும் இணைந்து எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மகன் அகஸ்தியாவின் எதிர்காலத்திற்கு இருவரும் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கடினமான நேரத்தில் தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் ஹர்திக் மற்றும் நடாஷா இருவரும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











