Dhoni: நாய்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய கிரிக்கெட் வீரர் தோனி.. கேக் கட்டிங் வேறயா!
மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தற்போது சினிமா படத் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். தோனி என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி, தற்போது ஐபிஎல்லின் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இதன்மூலம் இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

இதையடுத்து தற்போது தமிழில் தனது முதல் படத் தயாரிப்பை துவங்கியுள்ளார் தோனி. LGM என்ற படத்தை அவர் தயாரித்துவரும் சூழலில் படத்தில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்து வருகிறார்.
தன் வீட்டு நாய்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி: பிரபல கிரிக்கெட் வீரர் தோனி மிஸ்டர் கூல் என்று ரசிகர்களால் மட்டுமில்லாமல் விமர்சகர்களாலும் பாராட்டப்படுகிறார். இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல்லில் மட்டும் ஆடி வருகிறார். இந்நிலையில் பல துறைகளில் இவர் தனது இன்வெஸ்ட்மென்டை செய்து வருகிறார். குறிப்பாக எதிர்காலத்தில் பிரகாசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள துறைகளில் இவர் முதலீடு செய்து வருகிறார்.

சொந்தமாக பீர் நிறுவனம், வாகன நிறுவனம் ஆகியவற்றை நடத்திவரும் தோனி, ஆடைத்துறையிலும் தன்னுடைய முதலீட்டை செய்துள்ளார். மேலும் இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட தோனி, தன்னுடைய பண்யில் இயற்கை விவாசம் செய்து வருகிறார். மேலும் கருங்கோழி பண்ணை, விவசாயம் ஆகியவற்றிலும் இவர் அதிகமான கவனத்தை செலுத்திவருகிறார். விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று கருதப்படும் கருடா ஏரோ ஸ்பேஸ் என்ற ட்ரோன் நிறுவனத்திலும் அவர் தனது முதலீட்டை செய்துள்ளார்.
மேலும் சினிமாவிலும் இவர் தனது பங்களிப்பை செய்து வருகிறார். தோனி என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ள தோனி, தன்னுடைய முதல் படத்தை தமிழில் துவக்கியுள்ளார். LGM (Lets get married) என்ற படத்தை இவர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபல ஹீரோ ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்து வருகிறார். ஹீரோயினாக லவ் டுடே புகழ் இவானா கமிட்டாகியுள்ளார். இநத்ப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக தோனியை வைத்து அதர்வா என்ற கிராபிக் நாவலை செய்திருந்த தமிழ்மணி LGM படத்தின் இயக்குநராகியுள்ளார். விஜய், நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து தோனி படமியக்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. அதற்கேற்றாற்போல விஜய் - தோனி சந்திப்பும் நிகழ்ந்தது. ஆனால் இந்தப் படங்களை தயாரிக்க கால அவகாசம் தேவைப்படும் என்பதால் சிறிய பட்ஜெட்டில் தற்போது தனது முதல் படத்தை தயாரித்து வருகிறார்.

இதனிடையே நேற்றைய தினம் தோனி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அவருக்கு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர். அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் பிரபலங்களுடன் சிறப்பாக கொண்டாடப்படும என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு விருந்தினர்களாக தோனி தேர்ந்தெடுத்தவர்கள் யார் தெரியுமா?
தன்னுடைய அழகான தோட்டத்தில் தன்வீட்டு நாய்க் குட்டிகளுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் தோனி. தானே கேக்கின் மெழுகுவர்த்தியை ஏற்றி, தானே தனியாக ஊதி, பின்பு, நாய்களுடன் இணைந்து அதை சாப்பிட்டார் தோனி, அவரது மனைவி சாக்ஷி உள்ளிட்டவர்கள் யாரும் இல்லாமல் நாய்களுடன் மட்டுமே இந்தக் கொண்டாட்டம் காணப்பட்டது. மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார்


Click it and Unblock the Notifications











