Rishabh Pant: தலைவா.. ரஜினியின் கபாலி பட போஸை செய்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளைக் கடந்து தன்னுடைய திரை பயணத்தை தொடர்ந்து வருகிறார். தன்னுடைய முதல் படத்திலேயே தன்னுடைய ஸ்டைலை துவங்கிய ரஜினிகாந்த், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான ஸ்டைல்களால் ரசிகர்களை கவர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறார்.

அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், ரஜினியின் கபாலி பட போஸை ட்ரை செய்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தலைவா என்று அவர் உருக்கமும் தெரிவித்துள்ளார்.

Rajinikanth Kabali movie Rishabh pant

ரஜினியை போல ரிஷப் பண்ட் போஸ்: இந்த லுக்கை பலரும் ட்ரை செய்து தோற்றுதுதான் மிச்சம். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் இந்த லுக்கை ட்ரை செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு தமிழ்நாட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார். சிஎஸ்கே கேப்டனாகவே அவர் ஏராளமான ரசிகர்களின் சொந்தக்காரராக உள்ள நிலையில், இதுபோன்ற முயற்சிகளும் அவரை ஏராளமான ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. இந்நிலையில் தோனியை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், ரஜினியின் கபாலி லுக்கை ட்ரை செய்து அதை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் கபாலி பட லுக்: இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் தொடர்ந்து 40 நாட்கள் நடக்க உள்ளதாகவும் இந்த படத்திற்காக ஒட்டுமொத்தமாக 160 நாட்கள் ரஜினிகாந்த் டேட்ஸ் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் மிகவும் ஸ்டைலான லுக்கில் ரஜினி அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தார்.

ரஜினியை போல ரிஷப் பந்த் போஸ்: இந்த லுக்கை பலரும் ட்ரை செய்து தோற்றுதுதான் மிச்சம். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் இந்த லுக்கை ட்ரை செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு தமிழ்நாட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார். சிஎஸ்கே கேப்டனாகவே அவர் ஏராளமான ரசிகர்களின் சொந்தக்காரராக உள்ள நிலையில், இதுபோன்ற முயற்சிகளும் அவரை ஏராளமான ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. இந்நிலையில் தோனியை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், ரஜினியின் கபாலி லுக்கை ட்ரை செய்து அதை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.


தலைவா என உருக்கம்: மேலும் தலைவா என்றும் அவர் தன்னுடைய உருக்கத்தை தெரிவித்துள்ளார். தனக்கு தமிழில் மிகவும் பிடித்த நடிகர் ரஜினிதான் என்று முன்னதாக தோனி கூறியிருந்தார். இந்நிலையில் அனைத்து விஷயங்களிலும் தோனியை பின்தொடர்ந்து வரும் ரிஷப் பண்ட், தற்போது ரஜினி விஷயத்திலும் அதை செயல்படுத்தியுள்ளார். சமீப காலங்களில் ரிஷப், அதிகமான விளம்பர யுத்திகளை மேற்கொண்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் கபாலி படத்தின் ரஜினி போஸையும் அவர் ட்ரை செய்துள்ளதும் அந்த வகையில் அடங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X