ரஜினியின் தர்பார் படத்தில் யுவராஜ் சிங்கின் தந்தை நடிக்கிறாராம்! அதுவும் முக்கிய கேரக்டரில்!
சென்னை: நடிகர் ரஜினி காந்தின் தர்பார் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை அறிவித்தாலும் தொடர்ந்து புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனால் மனுஷர் படு பிஸியாக உள்ளார்.
தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் இருக்கும் போட்டோக்கள் அவ்வப்போது கசிந்து இணையத்தில் வைரலாகிறது.

யுவராஜின் தந்தை
இந்நிலையில் தர்பார் படம் குறித்த செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது தர்பார் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் அதிரடி பேட்ஸ்மேனுமான யுவராஜின் தந்தை யோகராஜ் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது.

ஓபனிங் சீன்
தர்பார் படத்தில் முக்கிய ரோலில் அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் ஓபனிங் காட்சியிலேயே ரஜினியுடன் யோகராஜ் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

மக்களின் வரவேற்பை பெறும்
யோகராஜ் நடிக்கும் காட்சிகள் நிச்சயம் மக்களின் வரவேற்பை பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா ஜோடி
யோகராஜை தவிர வில்லனாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியும் அவருக்கு தம்பியாக பிரதீக் பாபரும் நடிக்கின்றனர். மேலும் தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். ஏற்கனவே சந்திரமுகி படத்தில் நடிகை நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











