இனிமேல் ஒருத்தனும் வாலாட்ட முடியாது.. டீப் ஃபேக் வீடியோக்களுக்கு எதிராக களமிறங்கிய ராஷ்மிகா மந்தனா!
டெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனா என்றால் அவரது ரசிகர்கள் தொடங்கி தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர்கள் வரை பலரும் கூறுவது, நேஷ்னல் கிரஷ் என்பதுதான். இவர் நடிக்கும் படங்களில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் படம் எப்படியும் ஹிட் அடித்து விடுகின்றது. ஆனால் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு தன்னால் முயன்ற அளவிற்கு தனது நடிப்பின் மூலம் நியாயம் செய்து விடுகின்றார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 45 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் இவரை மத்திய அரசு சைபர் கிரைமின் பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்துள்ளது.
ராஷ்மிகா மந்தனா கடந்த ஆண்டில் இருந்தே இந்தி படத்தில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகின்றார். இதனால் அனிமல் படத்தில் நடித்தார். இந்த படத்தில் வழக்கமான ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியான காட்சிகளில் மட்டும் இல்லாமல், படுக்கையறை காட்சிகளிலும் பாலிவுட் உலகின் டாப் கதாநாயகிகளே ஆச்சரியப்படும் அளவிற்கு கவர்ச்சியாக நடித்து இருந்தார். இதனால் இவரது கால்ஷீட்டுக்காக பாலிவுட் உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அவரை ஒரே நேரத்தில் அணுகியதால் பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக மாறிவிட்டார்.

ராஷ்மிகா மந்தனா தற்போது பல படங்களில் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தாலும், அவரது நடிப்பில் வெளியாகவுள்ள புஷ்பா 2 படத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படம் வெளியாக இன்றில் இருந்து அதாவது அக்டோபர் 17ஆம் தேதியில் இருந்து இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருப்பதால் படக்குழு ப்ரோமோசன் வேலைகளை மெல்ல மெல்லத் தொடங்கியுள்ளது.

ராஷ்மிகா மந்தனா: சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆபாச வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. அதில் இருப்பது ராஷ்மிகா மந்தனா எனவும் பகிரப்பட்டது. ஆனால் அது டீப் ஃபேக் வீடியோ என ராஷ்மிகா மந்தனா சைபர் கிரைமில் புகார் அளித்தார். இதனால் டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கி பகிர்ந்தவர்களை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.

டீப் ஃபேக்: இந்நிலையில் இதுபோன்ற போலியான டீப் ஃபேக் வீடியோக்கள், புகைப்படங்களால் நாள்தோறும் பொதுமக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை யாரேனும் பாதிப்படைந்து கொண்டே உள்ளனர். இதனால், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், டீப் ஃபேக் வீடியோவால் தான் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டேன் என்பது குறித்து உங்களுக்குத் தெரியும். அதன் பின்னர் நான் தைரியமாக புகார் அளித்ததால், இந்திய சைபர் க்ரைம் போலீஸார் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ: இதுபோல் பலரும் டீப் ஃபேக் வீடியோக்கள், புகைப்படங்கள் மூலம் பாதிப்படைகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம் நமக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்கும் என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











