Oscars 2024: இந்தியர்களின் வரவேற்பை பெற்ற To Kill a Tiger ஆவணப்படம் ஆஸ்கர் விருதை இழந்தது!
லாஸ் ஏஞ்சல்ஸ்: 96வது அகாடமி விருதுக்கு டு கில் எ டைகர் ஆவணப்படத் திரைப்படப் பிரிவில் போட்டியிட்டது, இது போபி ஒயின்: தி பீப்பிள்ஸ் பிரசிடெண்ட், தி எடர்னல் மெமரி, ஃபோர் டாட்டர்ஸ் மற்றும் 20 டேஸ் இன் மரியுபோலுடன் இணைந்து பரிந்துரைக்கப்பட்டது. இத்திரைப்படம் விருதை பெரும் என எதிர்பார்த்த நிலையில் To Kill a Tiger ஆவணப்படம் ஆஸ்கர் விருதை இழந்தது.
டெல்லியில் பிறந்த கனடா திரைப்படத் தயாரிப்பாளரான நிஷா பஹுஜாவால் இயக்கிய ஆவணத் திரைப்படம் தான் To Kill a Tiger. கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஜார்கண்டை சேர்ந்த ஒரு ஆதிவாசி விவசாயி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தன் மகளுக்கு நீதி கேட்டு போராடுவதை வலியோடு சொன்னது இந்த ஆவணத் திரைப்படம்.

To Kill a Tiger: 2017 ஆம் ஆண்டு ஜார்கண்டில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி கூட்டுப் பலாத்தாரம் செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. 127 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குநர் பஹுஜா இதற்கு முன்பு தி வேர்ல்ட் பிஃபோர் ஹெர் (2012) திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
விருதை இழந்தது: 96வது அகாடமி விருதுக்கு டு கில் எ டைகர் ஆவணப்படத் திரைப்படப் பிரிவில் விருதைபெறும் என எதிர்பார்த்த நிலையில் இப்படத்திற்கு விருது கிடைக்கவில்லை. இது பலரை கவலை அடையச் செய்துள்ளது. மேலும், சிறந்த ஆவணப்படமாக 20 Days In Mariupol எனும் ஆவணப்படத்துக்கு விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்ட இயக்குனர் எம்ஸ்டிஸ்லாவ் செர்னோவ், ரஷ்யாவின் போர் பற்றியும் அதன் பாதிப்புகள் குறித்தும் உருக்கமாக பேசினார்.
மேலும், பணயக் கைதிகள், சிறையில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் என்னால் வரலாற்றை மாற்ற முடியாது, ஆனால், கடந்த காலத்தை என்னால் மாற்ற முடியாது என்று பேசினார். ஆஸ்கர் மேடையில் ஒலித்த இந்த போர் குரலால் அரங்கில் இருந்தவர்களை உணர்ச்சிவசப்பட வைத்தார்.


Click it and Unblock the Notifications











