Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
80 வயதை தொட்ட இந்திய சூப்பர் ஹீரோ.. அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!
சென்னை: இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
2 முறை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற நிலையிலும், இன்னமும் தொடர்ந்து நடித்து வருகிறார் அமிதாப் பச்சன்.
80வது பிறந்தநாளை கொண்டாடும் அமிதாப் பச்சனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பரான பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
ரஜினிக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடியா?அமிதாப் கேட்க மாட்டாரா? கோபப்பட்ட முதியவர்..ரஜினி சொன்ன சுவாரஸ்ய கதை

80வது பிறந்தநாள்
1942ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி பிறந்த பாலிவுட் திரையுலகின் முன்னணி சூப்பர்ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 80வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பி
1969ம் ஆண்டு வெளியான சாத் இந்துஸ்தான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அமிதாப் பச்சன். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான தேசிய விருதை தட்டிச் சென்றார். அமர் அக்பர் அந்தோனி, த்ரிசூல், டான், தோஸ்தானா, சக்தி, மகான், சாஹேன்ஷா, தீவார் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகராக நடித்து பாலிவுட்டின் பிக் பி என்றே அழைக்கப்பட்டு வருகிறார். அமிதாப் பச்சன், பல இளம் தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தும் கலக்கி உள்ளார்.

ரஜினிகாந்த் வாழ்த்து
80வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ரஜினிகாந்த் சூப்பரான வாழ்த்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தி லெஜண்ட்.. எனக்கு எப்போதுமே இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ஒரு நபர், இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் சூப்பர் ஹீரோ அமிதாப் பச்சன் 80வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு அன்பும் மரியாதையும் கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

11 படங்கள் ரீமேக்
அமிதாப் பச்சனின் 11 படங்களை தமிழில் ரீமேக் செய்து நடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அமர் அக்பர் அந்தோணி படத்தை தமிழில், சங்கர் சலீம் சைமன் எனும் பெயரில் ரீமேக் செய்து நடித்துள்ளார். மஜ்பூர் படத்தின் தமிழ் ரீமேக்கான நான் வாழவைப்பேன் படம், எல்லாருக்குமே தெரிந்த பில்லா திரைப்படம் அமிதாப் பச்சனின் டான் படத்தின் ரீமேக் தான். கஸ்மே வாடே - தர்மத்தின் தலைவன் ஆனது. தீவார் - தீ ஆனது. த்ரிசூல் - மிஸ்டர் பாரத், லாவாரிஸ் - பணக்காரன், மர்ட் - மாவீரன், மேலும், சிவா, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களும் அமிதாப் பச்சனின் இந்தி படங்களே என்பது குறிப்பிடத்தக்கது.