நம் நடிகர்கள் வெட்கங்கெட்டவர்கள், கபட நாடகம் ஆடுகிறார்கள்.. விளாசித் தள்ளிய பிரபல ஹீரோயின்!

By

மும்பை: ' இந்திய நடிகர்கள் வெட்கம் கெட்டவர்கள், கபடநாடகம் ஆடுகிறார்கள்' என்று பிரபல நடிகை சரமாரியாக சாடியுள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த 46 வயது ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரை, போலீஸ் அதிகாரி ஒருவர், கழுத்தில் காலால் மிதித்துக் கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மே 25ஆம் தேதி அமெரிக்காவின் மின்னசொட்டாவில் நடந்த இந்தக் கொடூரத்துக்கு எதிராக அங்கு பெரும் போராட்டம் எழுந்துள்ளது.

போராட்டங்கள்

போராட்டங்கள்

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீது போலீசாரல் தொடுக்கப்படும் இனவெறி தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜார்ஜ் மரணத்துக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த இனவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனங்களும் எழுந்து வருகின்றனர்.

கண்டனம்

கண்டனம்

இந்தி சினிமா பிரபலங்களான பிரியங்கா சோப்ரா, திஷா படானி, சோனம் கபூர் உட்பட பலர் இதற்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்தனர். இவர்கள் சிவப்பழகு கிரீம் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கங்கனா ரனவ்த் அளித்த பேட்டி ஒன்றில், இந்திய நடிகர்களை கடுமையாகச் சாடியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

வெட்கமே இல்லாமல்

வெட்கமே இல்லாமல்

பெரும்பாலான இந்திய நடிகர்கள் அனைத்து விதமான சிவப்பழகு கிரீம்களுக்கும் ஒப்புதல் அளித்து வருகின்றனர். ஆனால், வெட்கமே இல்லாமல் இப்போது கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி பற்றி பேசுகிறார்கள். என்ன தைரியம் அவர்களுக்கு? சிவப்பழகு கிரீம் நிறுவனங்களுடன் அவர்கள் செய்துள்ள மில்லியன் டாலர் ஒப்பந்தங்கள் பற்றி ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை?

மாநிறம் கொண்டவர்

மாநிறம் கொண்டவர்

இனவெறி இங்கே ஆழமாக வேரூன்றி இருக்கிறது. சினிமாவில் இயல்பான தோற்றம் கொண்ட கேரக்டருக்கு கூட கருப்பான ஒருவரை நடிக்க வைக்க, மறுத்து விடுகிறார்கள். நான் எந்த முக அழகு கிரீம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை. என் சகோதரி (ரங்கோலி) மாநிறம் கொண்டவர். அழகானவர்.

செய்ய முடியவில்லை

செய்ய முடியவில்லை

நான் அழகு கிரீம் விளம்பரங்களில் நடித்தால், நான் அவரை அவமானப்படுத்துவதற்கு சமம். என் சகோதரிக்காக, நான் அதை செய்ய முடியவில்லை என்றால், இந்த நாட்டுக்காக எப்படி செய்ய முடியும்? பாலிவுட் பிரபலங்கள் எல்லா சமூக பிரச்னைக்கும் குரல் கொடுப்பதில்லை. அவர்கள் தேர்வு செய்து குரல் கொடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா பயோபிக்

ஜெயலலிதா பயோபிக்

நடிகை கங்கனா, இப்போது தலைவி படத்தில் நடித்து வருகிறார். இது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக். இதில் அரவிந்த்சாமி, மதுபாலா, இந்தி நடிகை பாக்யஶ்ரீ உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். லாக்டவுன் காரணமாக இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X