ஒருநாள் கிரிக்கெட்டில் இரைட்டைச் சதம் விளாசிய ரோகித் சர்மா பயோபிக்கில் விஜய் சேதுபதியா?

சென்னை: தமிழ் சினிமாவில் எதார்த்த நடிப்பிற்கு பெயர் போனவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தற்போது மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாகிக் கொண்டே வருவதால் பட குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மகாராஜா படம் விஜய் சேதுபதி ஐம்பதாவது படம் ஆகும்.

விஜய் சேதுபதி நடிக்கவிருந்த இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட 800 என்ற திரைப்படம் கைவிடப்பட்டது. இதற்கு காரணமாக பல்வேறு அரசியல் காரணங்கள் கூறப்பட்டது. குறிப்பாக இலங்கை தமிழர்களின் ஈழப் பிரச்சனையின் போது, முத்தையா முரளிதரன் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டார், என குற்றச்சாட்டுகள் தமிழ் தேசியவாதிகளால் முன்வைக்கப்பட்டது. இதனால் இந்த படத்திற்கு அதிகப்படியான எதிர்ப்பு கிளம்பியது. விஜய் சேதுபதி நீக்கியது.

Vijay Sethupathi Rohit Sharma Maharaja

ஆனால் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய 800 படத்தின் போஸ்டர்கள் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அதற்கு காரணம் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் போல் இருந்தார் என்பதே. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருந்தார். அதன் பின்னர் பிரச்னைகள் ஏற்பட்டதால் 800 திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதியும் வெங்கட் பிரபுவும் வெளியேறினர். இதனால் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர் ஆன ஸ்ரீபதி இந்த படத்தை இயக்கினார்.

Vijay Sethupathi Rohit Sharma Maharaja

டி20 உலகக்கோப்பை: கிரிக்கெட் உலகில் தற்போது அனைவரது கவனமும் குவிந்துள்ள இடம் என்றால் அது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தான். உலகக் கோப்பை போட்டிககளுக்கு இடையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கிரிக்பஸில் நடைபெற்ற உரையாடலின் போது இந்திய கிரிக்கெட் வீரர்களின் பயோபிக்கலில் எந்தெந்த நடிகர்கள் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை பேசி உள்ளார்.

Vijay Sethupathi Rohit Sharma Maharaja

விராட் கோலி பயோபிக்: தினேஷ் கார்த்திக்கின் கற்பனையில் விராட் கோலியின் பயோபிக்கில் ரன்பீர் கபூர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனக் கூறியுள்ளார். அதே போல் தவானின் வாழ்க்கை வரலாற்றில் அக்‌ஷய் குமார் நடித்தால் சரியாக இருக்கும் என கூறியுள்ளார். சூர்யகுமார் யாதவ் பயோபிக்கில் பரேஷ் ராவல் அல்லது சுனில் செட்டி ஆகியோரில் யாராவது ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். அதேபோல் ஹர்திக் பாண்டியாவின் பயோ பிக்கில் ரன்வீர் சிங் நடித்ததால் பொருத்தமாக இருக்கும் என கூறியுள்ளார். அதேபோல் யஸ்வேந்திர சஹால் பயோபிக்கில் ராஜ்பால் யாதவும் பும்ரா பயோபிக்கில் ராஜ்குமார் ராவும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Vijay Sethupathi Rohit Sharma Maharaja

விஜய் சேதுபதி: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பயோபிக்கில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு விஜய் சேதுபதி நடித்தால் மிகச் சரியாக இருக்கும் என பதில் அளித்துள்ளார். ஏனென்றால் இருவரும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் என்பதால் ரோகித் சர்மாவின் பயோபிக்கிற்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்திய சினிமாவில் தோனியின் பயோபிக் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் யுவராஜ் சிங்கின் பயோபிக் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X