twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமெரிக்காவில் இந்திய சுதந்திர தினம்... சரத்குமார், வித்யாபாலன், ராதிகா பங்கேற்பு!

    By Shankar
    |

    நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த இந்திய சுதந்திர தின விழாப் பேரணியில் தமிழ் நடிகர்கள் சரத்குமார், ராதிகா, ஜெயஸ்ரீ மற்றும் பாலிவுட் புகழ் வித்யாபாலன் கலந்து கொண்டனர்.

    இந்தப் பேரணி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்தது. அமெரிக்க தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த இந்த சுதந்திர தின விழாப் பேரணியில் நடிகர் நடிகைகளுடன் அன்னா ஹாசாரே ஊழல் எதிர்ப்பு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

    வேட்டி சட்டையில்...

    வேட்டி சட்டையில்...

    சரத்குமார், ராதிகா ஆகிய இருவரும் அமெரிக்க தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அலங்கார ஊர்தியில் நகரை வலம் வந்தனர். அலங்கார ஊர்தியில், அமெரிக்க சுதந்திர சிலை சேலை அணிந்திருப்பது போல் வரையப்பட்டிருந்தது. சரத்குமார் கதர் வேட்டியும், சட்டையும், ராதிகா காஞ்சிபுரம் பட்டு சேலையும் அணிந்திருந்தனர்.

    அமெரிக்கர்களும்...

    அமெரிக்கர்களும்...

    இந்தப் பேரணி நடந்த வழி நெடுகிலும் ஏராளமான தமிழர்கள், வட இந்தியர்களுடன் அமெரிக்க மக்களும் நின்று கையசைத்து உற்சாகப்படுத்தினர். சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

    சுப்ரீம் ஸ்டார், சித்தி

    சுப்ரீம் ஸ்டார், சித்தி

    கூடியிருந்த மக்கள் சரத்குமாரையும், ராதிகாவையும் பார்த்து சுப்ரீம் ஸ்டார் என்றும் சித்தீ என்றும் அழைத்தது தங்களை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக சரத்குமார் தெரிவித்தார்.

    சிரமப்பட்ட நியூயார்க் காவல்துறை

    சிரமப்பட்ட நியூயார்க் காவல்துறை

    இவ்வளவு கூட்டத்தை எதிர்ப்பார்க்காத நியூயார்க் காவல் துறை, மக்களைச் சமாளிக்க பெரும் சிரமப்பட்டது. ஆனால் எந்த சிறு அசம்பாவிதமும் நேராத அளவுக்கு வந்திருந்தவர்கள் நடந்து கொண்டனர். தேசியக் கொடிகளை ஆட்டியபடி ராதிகா, வித்யா பாலன் போன்றவர்களுக்கு வாழ்த்துக் கூற ஆர்வம் காட்டினர் மக்கள்.

    English summary
    Indian stars Sarathkumar, Vidhya Balan, Radhika and many others graced the rally of Indian Independence Day in New York on Sunday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X