மணி ஹெய்ஸ்ட் ரீமேக்.. இந்தியாவில் இந்த நடிகர் நடிச்சா பக்காவா இருக்கும்.. அஜய் ஜேத்தி விருப்பம்!

மும்பை: பாலிவுட்டில் மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரை ரீமேக் செய்தால் யார் பொருத்தமாக இருப்பார்கள் என்பதை மணி ஹெய்ஸ்ட் நடிகர் அஜய் ஜேத்தியே தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது.

Recommended Video

DD Love for Money heist | DD Italian Song

பார்சிலோனாவை சேர்ந்த இந்திய நடிகர் அஜய் ஜேத்தி, நெட்பிளிக்ஸில் வசூல் சாதனை நிகழ்த்தி வரும் மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரின் 4வது பாகத்தில் நடித்துள்ளார்.

Indian Money Heist actor Ajay Jethi picks stars for Bollywood remake

4வது பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் வரை மணி ஹெய்ஸ்ட் என்றால் என்ன என்பது குறித்து ஒன்றுமே தனக்கு தெரியாது என்றும், தனது மேனேஜர், மணி ஹெய்ஸ்ட்டில் நடிக்க வாய்ப்பு வந்தது குறித்து தெரிவித்த பிறகு, அதை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார் அஜய் ஜேத்தி.

ஸ்பெயினில் மட்டுமின்றி, இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு அவரை திக்குமுக்காட செய்துள்ளது.

உடனடியாக அந்த வெப்சீரிஸில் நடிக்க சம்மதித்துள்ளார். அஜய் ஜேத்தி 4வது சீசனில் புரொஃபஸருக்கு உதவும் பாகிஸ்தான் ஹேக்கர் ரோலில் நடித்துள்ளார்.

சின்ன ரோலாக இருந்தாலும், மணி ஹெய்ஸ்ட் தொடரில் நடித்த அஜய் ஜேத்திக்கு, உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறதாம்.

Indian Money Heist actor Ajay Jethi picks stars for Bollywood remake

பாலிவுட்டில் மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸை ரீமேக் செய்தால், புரொஃபஸர் கதாபாத்திரத்திற்கு சட்டென்று தனது மனதில் நினைவுக்கு வந்தது இர்ஃபான் கான் என்றும், புரொஃபஸர் காதலி கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்தால் சிறப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும், அந்தாதூன் நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் மணி ஹெய்ஸ்ட் ரீமேக்கில் புரொஃபஸர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைவார் என்றும் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் மைண்ட் கொண்ட புரொஃபஸர் ஒருவர், ஒரு டீமை உருவாக்கி ஸ்பெயின் நாட்டில் காசு அச்சடிக்கும் இடத்தை கைப்பற்றி, தங்களுக்குத் தேவையான பணத்தை அச்சடித்துக் கொண்டு தப்புவதே மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸின் கதைக்களமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X