Kamal Haasan:இந்தியன் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசனின் சட்டையைப் பிடித்த ஷங்கர்! வெளியான புகைப்படம்

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த வாரம் ரிலீஸாகவுள்ள மிகப்பெரிய படமாக பார்க்கப்படுவது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம்தான். உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. மிகவும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது.

படத்திற்கு இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் இந்தியன் 2 படத்தைத் தூக்கிக் கொண்டு படக்குழு உலகம் முழுவதும் சுத்துகின்றது. இதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் புரோமோஷனுக்காக கமல் ஹாசன் கிட்டத்தட்ட ஒரு மாதத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளார். படத்தை கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலுக்கு தனது பிரச்சாரங்களில் ஒன்றாக பயன்படுத்த கமல் நினைத்து பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு மற்றும் சில பிரச்னைகள் காரணமாக படப்பிடிப்பு கொஞ்சம் தடைபட்டது.

Indian 2 Shankar Kamal Haasan

படம் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் ட்ரைலரை வைத்துப் பார்க்கும்போது, படத்தில் கமல்ஹாசன் பல்வேறு கெட்டப்புகளில் வருவதைப் போல் தெரிகின்றது. இதுமட்டும் இல்லாமல் ட்ரைலரைப் பார்க்கும்போதே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக முக்கிய காரணமாக இருந்தது.

நடிகர்கள்: இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, விவேக், மனோ பாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கான முன்பதிவு இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் உலா வருகின்றது. இந்த படத்தில் இடம் பெற்ற காலண்டர் பாடல் உலக அளவில் ட்ரெண்ட் ஆனதில் டாப் 2 இடத்தில் இருந்தது.

Indian 2 Shankar Kamal Haasan

துபாய்: இந்தியன் 2 படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் துபாயில் வேற லெவலில் நடைபெற்றது. படத்தினை வெளிநாடுகளில் இதுவரை கலெக்‌ஷன் செய்த படங்களை விடவும் அதிகப்படியான வசூலைக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குநரும் தயாராப்பு தரப்பில் இருந்தும் மிகத்தீவிரமாக புரோமோசன் செய்து வருகின்றனர். இந்நிலையில் துபாயில் இந்தியன் 2 படத்தின் போஸ்டரை நடுவானில் பறக்கவிட்டு படக்குழு புரோமோசன் செய்திருந்தது.

Indian 2 Shankar Kamal Haasan

கமல் சட்டையைப் பிடித்த ஷங்கர்: தற்போது இணையத்தில் வேகமாக ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் உலா வருகின்றது. அதில் இந்தியன் தாத்தா வேடத்தில் கமல்ஹாசன் இருக்கின்றார். கமல்ஹாசனின் சட்டையை சக நடிகர் ஒருவர் பிடித்து பேசும் படியான காட்சியை ஷங்கர் நடித்துக் காட்டுகின்றார். அப்போது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகின்றது. படத்தைப் பார்க்கும்போது கமல்ஹாசனின் சட்டையை ஷங்கர் பிடிப்பதைப் போல் உள்ளது. இதனை இணைய வாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

Indian 2 Shankar Kamal Haasan

கமல் ஹாசனின் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களில் இந்தியன் 2 படம் அதிகப்படியான வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்தின் மீது கமல்ஹாசன் பெரும் நம்பிக்கை வைத்துள்ளாராம். மேலும் இந்த படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X