இந்தியன் ரீரிலீஸ்; எல்லை மீறிய கமல் ஃபேன்ஸ்; தியேட்டருக்குள் இப்படி செய்யலாமா? நல்லவேளை எதுவும் ஆகல

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்த மாதம் 27ஆம் தேதி கல்கி 2898 ஏ.டி திரைப்படம் வெளியாக இருந்தாலும் ஒட்டுமொத்த கமல்ஹாசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ள இந்தியன் 2 படத்தின் மீதுதான் இருக்கிறது. கல்கி 2008 98 ஏடி படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. மேலும் கல்கி 2898 ஏ.டி படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி புரொடக்ஷன்ஸ் அந்த படத்திற்கான புரமோஷன் வேலைகளில் இன்னும் தீவிரமாக இறங்கவில்லை.

இசை வெளியீட்டு விழா

ஆனால் இந்தியன் 2 திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் எடுத்துள்ள லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்துக்கான ப்ரோமோஷன் வேலைகளை கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு முன்பிருந்தே தொடங்கி விட்டது. கடந்த ஒன்றாம் தேதி சென்னையில் நடைபெற்ற மிகவும் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் பெரும்பான்மையான நட்சத்திரங்களை ஒரே இடத்தில் குவித்து விட்டது என்று கூறலாம்.

indian Kamal Haasan Director Shankar Anirudh Lyca Productions Indian Re release

இந்தியன் ரீ ரிலீஸ்

இந்தியன் 2 படம் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களை இந்தியன் 2 படம் பார்ப்பதற்கு தயாராக்குவதற்காக இந்தியன் திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று இந்தியன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படத்தினை இந்தியன் 1 என்ற பெயரில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்துக்கு உற்சாகமாக் வந்த கமல் ரசிகர்கள் திரையரங்கில் உள்ளே புஸ்வானம் கொளுத்தி படத்தை கொண்டாடினர். திரையரங்கின் வெளியே கேரள சண்ட மேளம் இசைக்க வைத்து ஆட்டம் போட்டு குதூகலமாக படம் பார்க்கச் சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. படம் பார்க்க வந்த பல கமல் ரசிகர்கள் இந்தியன் 1 என்ற டி-ஷர்ட்டை அணிந்திருந்தனர். இந்தியன் படத்தின் முதல் பாகம் ரீலீஸ் செய்யப்பட்டது குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. அதேநேரத்தில் படத்தைக் கொண்டாடுகின்றேன் என ஏசி வசதியுள்ள தியேட்டருக்குள் அதிக தீயை உண்டாக்கும் புஸ்வானத்தை தியேட்டருக்குள் ரசிகர்கள் பற்றவைத்ததற்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றது.

கதறல் பாடல் லிரிக் வீடியோ



ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் இருந்து பாரா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு கதறல் பாடலின் லிரிக் வீடியோவை பட குழு வெளியிட உள்ளது என ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதற்கான பிரமோவையும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் உடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், துப்பாக்கி படத்தின் வில்லன் வித்யூத் ஜம்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் மறைந்த நடிகர்களான விவேக், மனோபாலா மற்றும் மாரிமுத்து இந்த படத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X