அடக்கடவுளே.. பிரபல பாடகி உஷா உதுப்பின் கணவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்!

சென்னை: இந்திய பாப் ஐகான் உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் நேற்று மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு வயது 78. அவரின் இறுதிச்சடங்கு இன்று கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உஷா உதுப்பின் இரண்டாவது கணவர் ஜானி சாக்கோ 1946ம் ஆண்டு பிறந்தார். கோட்டயத்தைச் சேர்ந்த மணற்காடு பைனும்கல் குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர் ஆவார். இவர், தேயிலை தோட்டத் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். உஷா உதுப் மற்றும் ஜானி சாக்கோ இருவரும் சந்தித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜானி சாக்கோவிற்கு முன்பாகவே உஷா உதுப்பிற்கு ராமு என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் அவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து , ஜானி சாக்கோவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

Usha Uthup

இறுதிச்சடங்கு: இந்நிலையில் நேற்று ஜானி சாக்கோ வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்த போது திடீரென வியர்ப்பது போலவும், அசௌகரியாக இருப்பதாக கூறியதை அடுத்து குடும்பத்தினர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரின் இறுதிச் சடங்குகள் இன்று கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜானி சாக்கோவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து, உஷா உதுப்பிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

கணீர் குரல்: பாடகி உஷா உதுப், கடந்த 50 ஆண்டுகளில் 17 இந்திய மொழிகள், 8 சர்வதேச மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி சாதனைப் படைத்துள்ளார். இவரது கணீர் குரலைக்கேட்டாலே ஆடாத கால்களும் ஆட்டம் போடும், அந்த அளவுக்கு அவரின் குரலில் ஒரு வைப் இருக்கும். பெரிய பொட்டு.. பட்டுப் புடவை.. தலை நிறைய மல்லிகைப் பூ உஷா உதுப்பின் அடையாளம். இப்படி டிரெடிஷனலான லுக்கில் இருக்கும் உஷா உதுப் பாடுவது வெஸ்டர்ன் பாடல். பல மணிநேரம் பாடினாலும், இறுதிவரை ரசிகர்களை எனர்ஜி லெவல் குறையாமல் ஆட்டம் போட வைப்பது இவருக்கு கை வந்த கலை. உஷா உதுப்பிற்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில், இசைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷண் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X