வீடா இல்லை ஜவுளிக்கடையா? ரக ரகமா பட்டுப்புடவை வைத்திருக்கும் உஷா உதுப்!

சென்னை: நாடறிந்த இசைப்பிரபலமான உஷா உதுப், வீடு முழுக்க வித விதமா ரக ரகமா பட்டுப்புடவை வைத்திருக்கிறார்.

நைட் கிளப் பாடகியாக இசைப் பயணத்தைத் தொடங்கிய உஷா உதுப், கடந்த 50 ஆண்டுகளில் 17 இந்திய மொழிகள், 8 சர்வதேச மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி சாதனைப் படைத்துள்ளார்.

indian pop singer usha uthup rich silk saree collection

இவரது கணீர் குரலைக்கேட்டாலே ஆடாத கால்களும் ஆட்டம் போடும், அந்த அளவுக்கு அவரின் குரலில் ஒரு வைப் இருக்கும்.

பாடகி உஷா உதுப்: பெரிய பொட்டு.. அதில் ஓர் எழுத்து.. பட்டுப் புடவை.. தலை நிறைய மல்லிகைப் பூ இதுதான் உஷா உதுப்பின் அடையாளம். இப்படி டிரெடிஷனலான லுக்கில் இருக்கும் உஷா உதுப் பாடுவது வெஸ்டர்ன் பாடல். பல மணிநேரம் பாடினாலும், இறுதிவரை ரசிகர்களை எனர்ஜி லெவல் குறையாமல் ஆட்டம் போட வைப்பது இவருக்கு கை வந்த கலை.

indian pop singer usha uthup rich silk saree collection

குறையாத காதல்: உஷா உதுப்பிற்கு இசைக்கு அடுத்து மிகவும் பிடித்தமான விஷயம் என்றால் அது காஞ்சிபுரம் பட்டு புடவை தான். கலர் கலரா பல புடவையை கட்டிய பிறகும் இவருக்கு பட்டுபுடவையின் மீதான காதல் குறையவே இல்லை என்கிறார். சிலர் கலைப்பொருட்கள், விலை மதிப்புமிக்க பொருட்களை சேகரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். அது போல நான் புடவையை சேகரித்து வைப்பதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

indian pop singer usha uthup rich silk saree collection

50 வருட பழைய புடவை: உஷா உதுப் தனது வீட்டில் 600க்கும் மேற்பட்ட புடவைகளை நிறத்திற்கு ஏற்றவாரு பிரித்து வைத்திருக்கிறார். இதில் புதுப்புடவைகள் மட்டுமில்லால் 50 வருட பழமையான புடவைகளையும் வைத்திருக்கிறார். தனது முதல் சம்பளத்தில் 1969 ரூபாய்க்கு மெட்ராஸில் வாங்கிய பட்டுப்புடவையை பளபளப்பு குறையாமல் இன்னும் பத்திரமாக வைத்துள்ளார்.

காஞ்சிவரம் பட்டுப்புடவை: அதேபோல பத்மஸ்ரீ விருதைப் பெறும்போது அணிந்திருந்த உதா நிற புடவை, அம்மா பரிசளித்த காஞ்சிவரம் ஆரஞ்சு நிற பட்டுப் புடவை என் அம்மாவின் அடையாளத்தின் ஒரு அங்கமாகிவிட்டது என்று கூறிய உஷா உதுப். நான் சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்ததால், தன்னால் புடவைகள் வாங்க முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. நான் பாடகியாகி விட்ட போது புடவை சேகரிப்பது என் பழக்கமாகிவிட்டது என்று பாடகி உஷா உதுப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

indian pop singer usha uthup rich silk saree collection

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X