நமக்கு மட்டும் 2.. சர்வதேச நண்பர்கள் தினத்தை கொண்டாடும் ரசிகர்கள்.. டிரெண்டாகும் #friendshipday2020

சென்னை: இந்தியாவில் நண்பர்கள் தினம் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜூலை 30ம் தேதியான இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Friendship Motion Poster Hidden Details | Losliya Mariyanesan, Harbhajan Singh, Arjun Sarja

நட்புக்கென்று ஒரு நாள் என்று வந்துவிட்டா நம்ம ஊர் பசங்க சும்மாவா விடுவாங்க, இதையும் கொண்டாடுவோமே என்று, சமூக வலைதளங்களில் #friendshipday2020 என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

3 இடியட்ஸ், தளபதி விஜய்யின் நண்பன் மற்றும் பல நண்பர்கள் படங்களின் போட்டோக்களை பதிவிட்டு கொண்டாட்டத்தை கோலாகலமாக்கி வருகின்றனர்.

தளபதி ரசிகர்கள்

தளபதி ரசிகர்கள்

பிரெண்ட்ஸ், நண்பன் எனும் நட்பை மையமாக வைத்து இரு படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள், கிடைத்துள்ள நண்பர்கள் தினத்தை கொண்டாடாமல் விடுவார்களா என்ன? நண்பன் படத்தின் ஸ்டில்களை பதிவிட்டு, நண்பர்கள் தின வாழ்த்துக்களை பகிர்ந்து #Master என்ற ஹாஷ்டேக்கையும் கூடவே வைரலாக்கி வருகின்றனர்.

தனுஷ் ரசிகர்கள்

தனுஷ் ரசிகர்கள்

ரசிகர்களையே தனது நண்பர்களாக பார்க்கும் மற்றொரு கோலிவுட் நடிகரான தனுஷின் ரசிகர்கள், அவருடன் ஒன்றாக எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு, ரகிட ரகிட ரகிட என ரைடு விட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் வேற லெவல் டிரெண்ட் ஆன நிலையில், தற்போது நண்பர்கள் தினத்தையும் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரேமம் ரசிகர்கள்

பிரேமம் ரசிகர்கள்

மலையாள திரையுலகின் இளம் நட்சத்திரமான நடிகர் நிவின் பாலியின் பிரேமம் பட புகைப்படங்களை பதிவிட்டு, நண்பர்கள் தின வாழ்த்துக்களை நிவின் பாலி ரசிகர்களும் டிரெண்ட் செய்து வருகின்றனர். இளைஞர்களை கவரும் படங்களையும், நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் அவர் தான் என அவரது ரசிகர்கள் பாராட்டி தள்ளி வருகின்றனர்.

தோழனின் தோள்களும் அன்னை மடி

தோழனின் தோள்களும் அன்னை மடி

நண்பன் படத்தின் புகைப்படங்கள் தான் இந்த ஹாஷ்டேக்கில் அதிகளவில் நிறைந்திருக்கிறது என்றே சொல்லலாம். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா நடிப்பில் வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற, "என் பிரெண்ட போல யாரு மச்சான்" பாடல் வரிகளை பதிவிட்டு, வைரலாக்கி வருகின்றனர்.

நண்பர்களுடன் லாஸ்லியா

நண்பர்களுடன் லாஸ்லியா

பிரண்ட்ஷிப் என்ற படத்தில் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா. தமிழ் சினிமாவில் சீக்கிரமே ஹீரோயினாக என்ட்ரி கொடுக்க உள்ள அவருக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ஏற்கனவே ரசிகர்கள் ஆர்மி தமிழ்நாட்டில் ஏராளமாக இருக்கிறது. நடிகை லாஸ்லியா தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, லாஸ்லியா ரசிகர்களும் ஹாஷ்டேக்கை பலப்படுத்தி வருகின்றனர்.

பார்த்திபன் வாழ்த்து

பார்த்திபன் வாழ்த்து

"இனிய நட்பு தின வாழ்த்துகள் ! என் நட்பு வட்டம் என்பது ஒரு unlimited company. எண்ணிக்கை மீறிய நம்பிக்கை என் மீது வைத்துள்ளோர் ஏராளம். என் அடுத்த படைப்பின் மூலம் நல்லதோர் வாழ்த்து சொல்வேன்.. நண்பர்களே உங்கள் அனைவருக்கும்!" என வழக்கம் போல தனது ஸ்டைலில் நடிகர் பார்த்திபனும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X