திடீரென டிரெண்டான பொன்னியின் செல்வன் ஹாஷ்டேக்..காரணம் இதுவா இருக்குமோ? #IndianPridePONNIYINSELVAN

சென்னை: பொன்னியின் செல்வன் படம் குறித்த எந்தவொரு அப்டேட்டோ, அறிவிப்போ வராத நிலையில், திடீரென #IndianPridePONNIYINSELVAN என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எம்.ஜி.ஆர் முதல் கமல் வரை பலரும் இயக்க ஆசைப்பட்டனர்.

ஆனால், அந்த கனவை தற்போது நனவாக்கி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். லாக்டவுன் தளர்வுகள் ஏற்பட்டு வரும் நிலையில், விரைவிலேயே இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திடீர் டிரெண்டிங்

திடீர் டிரெண்டிங்

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனத்திடம் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்போ படத்தை பற்றிய அப்டேட்டோ வராத நிலையில், தற்போது #IndianPridePONNIYINSELVAN ஹாஷ்டேக்கை தமிழ் சினிமா ரசிகர்கள் திடீரென டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்த பிரம்மாண்ட படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருவதால் அந்த நடிகர்களின் ரசிகர்களும் ஹாஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

நந்தினி தேவி

நந்தினி தேவி

பொன்னியின் செல்வன் நாவலில் அனைத்து ஆண் மகன்களையும் வளைத்துப் போடும் பேரழகு கொண்டவளான நந்தினி தேவியின் கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார். ஊமச்சி மந்தாகினியாகவும் இரட்டை வேடங்களில் மிரட்ட உள்ளார். இந்த ஹாஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், கொரோனாவே சீக்கிரம் போ, ராணி ஐஸ்வர்யா ராய் ஆட்டத்தை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

செம ஸ்டைலிஷ்

செம ஸ்டைலிஷ்

பாகுபலியை போல வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் சியான் விக்ரம், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்டோர், அந்த படத்திற்காக நீண்ட முடி மற்றும் ஜிம் பாடியுடன் செம ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு அந்த அந்த நடிகர்களின் ரசிகர்கள் சீக்கிரமே இந்த காம்போவை பெரிய ஸ்க்ரீனில் காண வேண்டும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

ராஜ ராஜ சோழன்

ராஜ ராஜ சோழன்

சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்ரா படத்தில் ராஜாவாக ஜெயம் ரவி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் அப்படியே டிராப் ஆனது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் லீடு ஹீரோவாக ஜெயம் ரவி நடித்து வரும் நிலையில், ஜெயம் ரவியின் ரசிகர்கள் இந்த டேக்கை வேற லெவலில் டிரெண்ட் செய்கின்றனர்.

800 கோடி

800 கோடி

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இரு பாகங்களாக தயாரிக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் 800 கோடிகள் என்ற வதந்தி ஆரம்பத்தில் வைரலாக பரவியது. தற்போது கொரோனாவுக்கு பின்னர், ஏற்கனவே திட்டமிடப்பட்ட படத்தின் பட்ஜெட் மேலும், குறைக்கப்படும் என்றும், ஹீரோக்களின் சம்பளங்களும் குறையும் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஆதித்ய கரிகாலன்

ஆதித்ய கரிகாலன்

பொன்னியின் செல்வன் கதையில் மிகவும் வலிமையான கதாபாத்திரம் என்றால், அது பொன்னியின் செல்வனின் அண்ணனான ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரம் தான். அந்த கதாபாத்திரத்தில் சியான் விக்ரம் மிரட்ட உள்ளார் என்பது உறுதி என அவரது டிவீட் போட்டு வருகின்றனர். கோப்ரா படத்தின் ரிலீசுக்கும் ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் காத்திருக்கின்றனர்.

Recommended Video

Latest: Ponniyin Selvan cast revealed by Trisha |Maniratnam | Kundhavai, Raja Raja Cholan, Karikalan
என்ன காரணம்

என்ன காரணம்

திடீரென பொன்னியின் செல்வன் ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாக என்ன காரணம் என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கும். ஆனால், கார்த்தி ரசிகர்கள் தான் இந்த ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர் என்ற தகவல் கசிந்துள்ளது. நாளை நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பொன்னியின் செல்வன் ஹாஷ்டேக் டிரெண்டாகிறது. பொன்னியின் செல்வன் கதையை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கொண்டு செல்லும் வந்தியத்தேவனாக அவர் தான் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X