இதே வேலையா போச்சு.. காதில் ஓம் கம்மல்.. இந்து மதத்தை அவமதித்ததாக பிரபல நடிகைக்கு குவியுது கண்டனம்!

மும்பை: சர்வதேச மாடல் அழகியான கிம் கர்தாஷியன் இந்து மதத்தின் புனித முத்திரையான ஓம் முத்திரையை கொச்சைப்படுத்தியதாக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

கீப்பிங் அப் வித் கர்தாஷியன் தொடர் மூலம் உலகப் புகழ் பெற்றவர் நடிகை கிம் கர்தாஷியன். சில ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், காதில் இந்து மத முத்திரையான வடமொழி ஓம் முத்திரை டிசைனில் கம்மல் அணிந்து சமீபத்தில் போட்டோக்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

ஆபாச பட நடிகை

ஆபாச பட நடிகை

கடந்த 2007ம் ஆண்டு கிம் கர்தாஷியன் சூப்பர்ஸ்டார் எனும் ஆபாச வீடியோ மூலம் உலகம் முழுவதும் பாப்புலரானார் இவர். தற்போது 40 வயதாகும் நிலையிலும், தொடர்ந்து பிகினி உடைகளிலும் அரை நிர்வாண போட்டோக்களையும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காதில் ஓம் கம்மல்

காதில் ஓம் கம்மல்

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக காதில் 'ஓம்' முத்திரை பதித்த கம்மலை அணிந்து கொண்டு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்க, அதனை பார்த்த இந்தியர்கள் நடிகை கிம் கர்தாஷியனுக்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

இந்து மத நம்பிக்கை

இந்து மத நம்பிக்கை

புனித முத்திரையான ஓம் முத்திரையை நீங்கள் ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டாக பயன்படுத்தி இந்து மதத்தின் புனிதத்தையும் எங்கள் நம்பிக்கையும் கொச்சைப் படுத்துகின்றீர்கள், அடிக்கடி இதே போன்ற செயல்களை ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் செய்வது தொடர்கதையாகி வருகிறது என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

கலாச்சார சீர்கேடு

கலாச்சார சீர்கேடு

எங்கள் இந்து மதத்தையும் இந்தியர்களின் கலாச்சாரத்தையும் தொடர்ந்து உங்களை போன்ற ஆட்கள் கெடுத்து வருகின்றனர். உடனடியாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்துங்கள் என்றும், புனித முத்திரையை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

விநாயகர் நெக்லேஸ்

விநாயகர் நெக்லேஸ்

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க பாடகி ரிஹானா மேலாடை ஏதும் அணியாமல் கழுத்தில் விநாயகர் நெக்லேஸை போட்டு எடுத்த போட்டோக்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில், கிம் கர்தாஷியன் தனது காதுகளில் அணிந்திருக்கும் கம்மல்களில் ஓம் முத்திரை இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கெல்லாம் இதே பொழப்பா போச்சா என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சம்பள மோசடி

சம்பள மோசடி

சமீபத்தில் கிம் கர்தாஷியனின் தோட்டத்தில் வேலை செய்த 7 ஊழியர்கள் தங்களை வேலையை விட்டு நீக்கி விட்டதாகவும், உரிய சம்பளத்தை கொடுக்கவில்லை என்றும், அதிக நேரம் வேலை வாங்கியதாகவும் அரசுக்கு வரி செலுத்துவதாக பிடித்த சம்பளத்திலும் மோசடி செய்தார் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X