top 10 pupular actors 2024: இந்த விஷயத்துல சமந்தாவை பின்னுக்கு தள்ளிய சோபிதா துலிபாலா.. அட அப்படியா!

சென்னை: 2024ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த ஆண்டு பலசுவாரஸ்யங்களை சந்தித்துள்ளது. பல சுவாரஸ்யமான படங்களையும் பல சிறிய பட்ஜெட் படங்களையும் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு கொடுத்துள்ளன. பல பிரம்மாண்ட படங்கள் சொதப்பியதையும் சிறிய பட்ஜெட் படங்கள் நம்பிக்கை கொடுக்கும்வகையில் ஹிட்டடித்ததையும் பார்க்க முடிந்தது.

இந்த ஆண்டில் திரைத்துறையினரின் பர்சனல் வாழ்க்கையும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. பல ஆண்டுகளக இணைந்து வாழ்ந்துவந்த பல பிரபலங்கள்இந்த ஆண்டில் விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தனர். ஏஆர் ரஹ்மான், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்டவர்களும் இந்த ஆண்டில் தங்களின் இணையை பிரிந்துள்ளனர். இதனிடையே இந்த ஆண்டின் டாப் 10 நடிகர்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது.

imdb list tripti dimri 2024 top stars 2024 in india

டாப் பாப்புலர் நடிகர்கள் 2024: 2024ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டின் டாப் லிஸ்ட் பட்டியல்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2024ம் ஆண்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் டாப் 10 இந்திய ஸ்டார்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஐஎம்டிபி இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஷாருக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்ட முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு அனிமல் படத்தில் நடித்த த்ரிப்தி டிம்ரி முதலிடத்தை பிடித்துள்ளார். இதுவரை பாலிியுட்டில் இவர் மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ள நிலையில் அனிமல் படம் மூலமாகவே இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்துள்ளன.

அனிமல் பட நடிகைதான் டாப்: இந்த பட்டியலில் தீபிகா படுகோன் இரண்டாவது இடத்திலும் ஷாருக்கான் 4வது இடத்திலும் உள்ளனர். பாலிவுட்டின் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் தீபிகா படுகோன் ஐஎம்டிபி வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். தன்னுடன் படங்களில் நடித்த ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த ஆண்டில் தீபிகா படுகோன் நடிப்பில் கல்கி, ஃபைட்டர், சிங்கம் அகைன் என மூன்று படங்கள் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளன. இந்த மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகியுள்ளன.

imdb list tripti dimri 2024 top stars 2024 in india

4வது இடத்தில் ஷாருக்கான்: இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் பாலிவுட் நடிகர் இஷான் கட்டார் உள்ளார். இதற்கு அடுத்த இடத்தில்தான் நடிகர் ஷாருக்கான் இடம் பெற்றுள்ளார். ஷாருக்கான் நான்காவது இடத்தில் உள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஷாருக்கானிற்கு அடுத்த ஐந்தாவது இடத்தில் நடிகர் நாக சைதன்யாவின் மனைவியும் பிரபல நடிகைமான சோபிதா துலிபாலா இடம்பெற்றுள்ளார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் பாலிவுட் நடிகை ஷர்வாரி இடம்பெற்றுள்ள நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் ஏழாவது இடத்தில் உள்ளார்.

சமந்தாவை பின்னுக்கு தள்ளிய சோபிதா: ஐஎம்டிபியின் இந்த பட்டியலில் சமந்தாவிற்கு எட்டாவது இடமும் ஆலியா பட்டிற்கு ஒன்பதாவது இடமும் தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு பத்தாவது இடமும் கிடைத்துள்ளது. தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரரான பிரபாஸ், 10வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்துள்ளது. இந்த பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த், அஜித், விஜய் இவர்கள் யாருமே இடம் பெறவில்லை. இதனிடையே சமந்தா எட்டாவது இடத்தில் உள்ள நிலையில் சோபிதா துலிபாலா அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு 5வது இடத்தில் உள்ளதும் ரசிகர்கள் கவனத்தை பெற்றுள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X