Brahmanandam Networth: அடேங்கப்பா.. 68 வயதில் இத்தனை கோடியா?.. பிரம்மானந்தத்தின் சொத்து மதிப்பு இதோ!

ஹைதராபாத்: 1956ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி பிறந்த நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1100 படங்களுக்கும் மேல் நடித்த இவர் அதிக படங்களில் நடித்த வாழும் நடிகர் என்கிற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார். பத்மஸ்ரீ உள்ளிட்ட உயரிய கவுரவத்தை பெற்ற இவர் தெலுங்கு திரையுலகின் மீம் கடவுளாகவும் வலம் வருகிறார்.

1986ம் ஆண்டு வெளியான சிரஞ்சீவியின் சந்தாபாய் படத்தின் மூலம் அறிமுகமான பிரம்மானந்தம் இதுவரை தென்னிந்திய மொழிகளில் 1100 படங்களுக்கும் மேல் நடித்து அசத்தி உள்ளார். முன்னணி காமெடி நடிகரான இவர் இந்தியாவின் பணக்கார காமெடி நடிகராக வலம் வருகிறார். காமெடி நடிப்பை தாண்டி தயாரிப்பு நிறுவனம், பிசினஸ் என இந்த வயதிலும் மனுஷன் பல்வேறு திறமைகளை காட்டி பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார்.

Indias Richest Comedy Actor Brahmanandam celebrates 68th birthday today

பிரம்மானந்தம் பிறந்தநாள்: ஆந்திராவில் பிறந்து வளர்ந்த நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் நடிக்க ஆரம்பித்த பிறகு இவர் இல்லாத தெலுங்கு படங்களே ரிலீஸ் ஆகவில்லை என்கிற அளவுக்கு டோலிவுட்டில் தனியொரு மனிதனாக பல படங்களில் இரவு பகல் பாராமல் நடித்து 1100 படங்களில் நடித்து கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார் பிரம்மானந்தம். சுமார் 35 ஆண்டுகள் சினிமாவில் காமெடியனாக நடித்து கலக்கிய இவர் அனைத்து முன்னணி டோலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களின் ஃபேவரைட் நடிகரே பிரம்மானந்தம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவை விட மாஸ்: தமிழ் சினிமாவில் மீம் கிரியேட்டர்களின் கடவுள் வடிவேலு என்றால் தெலுங்கு திரையுலகில் பிரம்மானந்தம் வடிவேலுவை விட செம மாஸ் ஆக உள்ளார். உலகளவில் இவரை வைத்து உருவாக்கப்பட்ட மீம்கள் டிரெண்டாகி உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு பிரம்மானந்தத்திற்கு பத்மஸ்ரீ விருது அளித்து கெளரவித்தனர். நந்தி விருதுகள் முதல் பல அங்கீகாரங்கள் இவரது நகைச்சுவை திறமையை பார்த்து வழங்கி உள்ளனர்.

Indias Richest Comedy Actor Brahmanandam celebrates 68th birthday today

கில்லி காமெடி: தெலுங்கில் டாப் கமெடி நடிகராக வலம் வந்த பிரம்மானந்தம் எஸ்.ஜே. சூர்யா இயக்கி ஹீரோவாக நடித்த நியூ படத்தின் மூலம் தமிழ் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த கில்லி படத்தின் "திஸ் இஸ் ஹோமம்மா.. கான்சென்ட்ரேஷன் மிஸ் ஆகுதே.. ராமகிருஷ்ணா உனக்கு இருக்கு கிருஷ்ணாயில்" என வரும் அந்த ஒரு சின்ன சீன் காமெடி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பின்னர் மொழி, சரோஜா, சத்யம், குசேலன், தோனி, ஜில்லா, அஞ்சான், லிங்கா, வாலு, தானா சேர்ந்த கூட்டம் கடந்த ஆண்டு வெளியான சந்தானத்தின் கிக் என பல தமிழ் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

சொத்து மதிப்பு: ஒரு படத்துக்கு சுமார் 4 முதல் 6 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறாராம் பிரம்மானந்தம். 1100 படங்களில் நடித்தும் விளம்பரங்கள், தயாரிப்பு நிறுவனம் என பல்வேறு வகையில் இவர் சம்பாதித்து சேர்த்த சொத்து மட்டும் ஒட்டுமொத்தமாக 490 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி பிரம்மிக்க வைக்கின்றன. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரம்மானந்தம் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து அவருக்கு ஹேப்பி பர்த்டே வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X