twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க ட்விட்டரில் வலியுறுத்தும் தல, தளபதி ரசிகர்கள்

    By Siva
    |

    சென்னை: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

    இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, அரசியல் கட்சி தலைவர்கள், மாணவர்கள் அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆகியவை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

    இந்நிலையில் இந்தியா காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

    #IndiashouldnotattendColomboCommonwealth

    #IndiashouldnotattendColomboCommonwealth

    கொழும்புவில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது(#IndiashouldnotattendColomboCommonwealth) என்ற வார்த்தை தான் தற்போது ட்விட்டரில் டிரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. இதை டிரெண்ட் செய்வதே அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் தான்.

    பிரபலங்களும் ஆதரவு

    பிரபலங்களும் ஆதரவு

    இந்தியா இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று நடிகர்கள் ஜீவா, சிபிராஜ், உதயநிதி ஸ்டாலின், நடிகை பியா பாஜ்பாய், எடிட்டர் டி.எஸ். சுரேஷ் ஆகியோரும் ட்வீட் செய்துள்ளனர்.

    விஜய் ரசிகர்களின் ட்வீட்

    விஜய் ரசிகர்களின் ட்வீட்

    விஜய் பெயரில் அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்யப்பட்டது: உலகின் கவனத்தை ஈர்க்க இலங்கையின் போர் குற்றம் குறித்து ட்வீட் செய்யுங்கள்.

    அஜீத் ரசிகரின் ட்வீட்

    அஜீத் ரசிகரின் ட்வீட்

    எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்காக கொழும்புவில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது(#IndiashouldnotattendColomboCommonwealth) என்று அஜீத் ரசிகர் கௌதம் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

    சூர்யா ரசிகர்களும்

    சூர்யா ரசிகர்களும்

    இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி சூர்யா ரசிகர்களும் ட்வீட் செய்து வருகின்றனர்.

    English summary
    #IndiashouldnotattendColomboCommonwealth is trending in twitter as Ajith and Vijay fans are tweeting with this hashtag wanting the centre to boycott the summit.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X