twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘பஞ்சாப்பின் வைரங்கள்’ என இந்திரா காந்தி கொலையாளிகளுக்கு புகழாரம்- காம் தே ஹீரே படத்திற்கு எதிர்ப்பு

    |

    சண்டிகர்: மறைந்த பிரதமர் இந்திரா காந்தி கொலையாளிகளை 'பஞ்சாபின் வைரங்கள்' என்று ஒரு படத்தில் வர்ணித்திருப்பது எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.

    இந்திரா காந்தி

    இந்திரா காந்தி

    கொலையாளிகளான சத்வத் சிங், பியாந்த் சிங் ஆகியோரை புகழ்ந்தும், அவர்களை பஞ்சாபின் வைரங்கள் என்று வர்ணித்தும், பஞ்சாபி மொழிப் படம் ஒன்றில் காட்சிகள் வைத்துள்ளனர். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    இந்தப் படம்

    இந்தப் படம்

    வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. ஆனால் இப்படத்தை திரையிடக் கூடாது. தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    எச்சரிக்கை...

    எச்சரிக்கை...

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் படம் திரையிட அனுமதிக்கப்பட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    எதிர்ப்பு...

    எதிர்ப்பு...

    இதேபோல ஆளும் அகாலிதளத்திற்கும் படத்தை திரையிட எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவினர் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    உத்தரவு...

    உத்தரவு...

    இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கவனிக்குமாறு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், மாநில உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்திரா காந்தி படுகொலை...

    இந்திரா காந்தி படுகொலை...

    1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தனது மெய்க்காப்பாளர்களான பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோரால் மிக நெருக்கத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திரா காந்தி. அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராணுவத்தை அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த படுகொலை நடந்தது.

    காம் தே ஹீரே...

    காம் தே ஹீரே...

    இந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு காம் தே ஹீரே என்ற பெயரில் பஞ்சாபியில் ஒரு படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் தலைப்புக்கு ஆங்கிலத்தில் சமூகத்தின் வைரங்கள் என்று பொருள் படும்.

    English summary
    A Punjabi film on former Prime Minister Indira Gandhi's assassins, Satwant Singh and Beant Singh, is facing strong political demands for its ban ahead of its release this Friday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X