கறுப்பு கட்டழகி.. ஐட்டெக்ஸ் கண்ணழகி.. வைரலாகும் வாரிசு நடிகையின் போட்டோஸ்.. வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மாடர்ன் டிரெஸில் நடத்தியிருக்கும் போட்டோ ஷுட் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
பிகில் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் இந்திரஜா.
அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் இந்திரஜா.

படு அசத்தல்
ரோபோ சங்கரின் மனைவியும் படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார். கன்னிமாடம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர். இந்நிலையில் இந்திரஜா மாடர்ன் டிரெஸில் படு அசத்தலாக போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார்.

வைரல் போட்டோஸ்
மாடர்னான ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். ஸ்லீவ்லெஸ் கவுனில் மேலே ஓவர் கோட் அணிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார் இந்திரஜா. ஃபிரி ஹேர் விட்டு கலக்கலாய் இருக்கிறார் இந்திரஜா. இந்திரஜாவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,
ஐட்டெக்ஸ் கண்ணழகி
இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்திரஜாவை கறுப்பு கட்டழகி.. ஐட்டெக்ஸ் கண்ணழகி, லட்டு மூக்கழகி என வர்ணித்துள்ளனர். இன்னும் சிலர் அழகாக இருக்கிறீர்கள் என்றும் அவரது போட்டோக்களை பார்த்து புகழ்ந்திருக்கின்றனர் நெட்டிசன்கள். இன்னும் சிலர், பாண்டியம்மாவுக்கு இப்படி ஒரு தங்கச்சியா என்றும் கேட்டுள்ளனர்.
அதிர்ச்சிக்கு உள்ளாக்குங்கள்
இந்த போட்டோவுக்கு இதைச் செய்யுங்கள், அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குங்கள், சத்யா அண்ணாவை நம்பி நான் இதை செய்தேன். மேலும் ஒட்டுமொத்த குழுவே என்னை நம்பியது. ஒட்டு மொத்த குழுவும் வேலைப்பார்த்து மிக அழகான புதிய தோற்றத்தை கொண்டு வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

குண்டம்மா - சர்ச்சை
இந்திரஜா நடிப்பது மட்டுமல்லாமல் டான்ஸும் ஆடுவார். செல்ல மகள் டான்ஸ் ஆடும்போது வீடியோ எடுத்து அது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் ரோபோ சங்கர். பிகில் படத்தில் விஜய் பயிற்சி அளிக்கும் பெண்கள் கால்பந்து அணியில் ஒருவராக நடித்திருந்தார் இந்திரஜா. படத்தில் இவரை விஜய் குண்டம்மா என கூறி அழைத்ததற்கு எதிர்ப்பு எழுந்தது.


Click it and Unblock the Notifications











