பூவுக்கு பொறந்தநாளு.. திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாள்.. கணவருடன் கொண்டாடிய இந்திரஜா!
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு படுகோலாகலமாக நடைபெற்றது. ஆட்டம் பாட்டத்துடன் நடந்த இவர்களின் திருமண வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. தற்போது, இந்திரஜா தனது பிறந்த நாளை கணவருடன் கொண்டாடி உள்ளார்.
தொலைக்காட்சியில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் பிஸியான நடிகராக இருக்கும் நடிகர் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜாவும் அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, விருமன் படத்திலும் நடித்திருந்தார்.

நடிகர் ரோபோ ஷங்கர்: நடிகர் ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவின் வளர்ப்பு தம்பியான கார்த்திக்கிற்கும், இந்திரஜாவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி அனைவரையும் வியக்க வைத்துவிட்டார் ரோபோ சங்கர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒருசில நாட்கள் இந்த திருமணம் நடைபெற்றது.

பிரபலங்கள் வாழ்த்து: இந்திரஜா மற்றும் கார்த்திக்கின் திருமணம் மதுரையில் நடைபெற்ற நிலையில், வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பார்த்திபன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிருத்விராஜ், ராமராஜன், தம்பி ராமய்யா, சுரேஷ் சக்ரவர்த்தி, சுப்பு பஞ்சு, செளந்தர்ராஜா, மாஸ்டர் மகேந்திரன், கலா மாஸ்டர், இயக்குனர்கள் S. P. முத்துராமன் என பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

பூவிற்கு பிறந்த நாள்: இந்நிலையில், இந்திரஜா தன்னுடைய 23வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். திருமணம் ஆகி தன்னுடைய கணவருடன் இந்த பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இதுகுறித்த போட்டோக்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்திரஜாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











