முருகன் கெட்டப்பில் ரோபோ சங்கரின் பேரன்.. அப்படியே அப்பாவை போல.. சுத்தி போடுங்க கண்ணு பட போகுது!
சென்னை: பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் தான் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. அந்த படத்தைத் தொடர்ந்து கார்த்திக், அதீத சங்கர் நடித்த விருமன் படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு, கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட, இந்திரஜாவிற்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் முதன் முதலாக குழந்தையின் போட்டோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை இந்திரஜா ஒரு சில திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருந்த போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். தொடர்ந்து இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்த இவர், திடீரென தனது முறை மாமன் போட்டோவை பகிர்ந்து, இவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதியருக்கு கடந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

கோலாகல திருமணம்: ஹல்தி, மெஹந்தி, சங்கீத் என தடபுடலாக நடந்த இந்த திருமணத்தில் சின்னதுரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அது மட்டுமல்லாமல் அம்பானி வீட்டு திருமணம் போல நடந்தது என்று இணையத்தில் பலரும் இவர்களின் திருமணத்தை ட்ரோல் செய்யும் அளவிற்கு இவர்களில் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது திருமணம் முடிந்த கையோடு, மதுரையில் சொந்த பந்தங்களை கூட்டி, ராஜ விருந்தும் வைக்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகு கார்த்திக் மற்றும் இந்திரஜா விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்துக்கொண்டிருக்கும் போதே இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கார்த்திக் அறிவித்து இருந்தார்.

பெயர் வைத்த கமல்: இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் இந்திரஜாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த வீடியோவையும் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவருக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், நேற்று கமல்ஹாசனை, ரோபோ சங்கர்,மகள், மருமகன் என குடும்பத்தோடு சந்தித்தனர். அப்போது கமலஹாசன், குழந்தைக்கு நட்சத்திரன் என அழகான தமிழ் பெயர் வைத்தார். இதனை இந்திரஜா தனது இன்ஸ்டாகிராமில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார். அதில், " எங்களுடைய வாழ்க்கையின் அர்த்தமான எங்கள் மகனுக்கு...உலக நாயகன், நம்மவர், அன்பு தலைவர், பத்ம பூஷன் Dr. கமல் ஹாசன் அவர்கள் தம்பிக்கு "நட்சத்திரன்" என பெயரிட்டு வாழ்த்தினார்...என்றும் உங்கள் அன்புடன் எங்கள் நட்சத்திரன் கார்த்திக்.." பதிவிட்டு இருந்தார்.

சின்ன முருகன்: குழந்தையின் முகத்தை இதுவரை ரசிகர்களுக்கு காட்டாமல் இருந்த இந்திரஜா, குழந்தையின் முகத்தையும் முதன்முதலாக தனது ரசிகர்களுக்கு காட்டி போட்டோவை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் தனது குழந்தைக்கு முருகன் போல வேடமிட்டு, எங்கள் வீட்டு சின்ன முருகன் நட்சத்திரன் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து, குழந்தை அப்படியே அப்பாவைப் போல இருக்கிறது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்திரஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய Kooran படத்தில் நடித்திருந்தார். இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான்,கவிதா பாரதி, இந்திரஜா ரோபோ சங்கர் என பலர் நடித்திருந்தனர். இந்த படம் 28ந் தேதி தியேட்டரில் வெளியானது.


Click it and Unblock the Notifications











