Indraja Robo shankar: செல்லக்குட்டி நட்சத்திரன்.. 100வது நாள் கொண்டாட்டம்.. டிரெண்டான போட்டோஸ்!
சென்னை: தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்தன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர். அந்த படத்தைத் தொடர்ந்து கார்த்திக், அதிதீ சங்கர் நடித்த விருமன் படத்தில் அதீதியின் தோழியாக நடித்திருந்தார். இந்திரஜாவிற்கு ஜனவரி மாதம் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையின் 100வது நாளை சிறப்பாக கொண்டாடி உள்ளனர். அந்த போட்டோவை இந்திரஜா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து பிரபலமானவர் தான் நடிகர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் புகழை தொட்ட இவர் சினிமாவில் தனது திறமையை நிரூபித்து இன்று அனைவரின் மனம் கவர்ந்த நடிகராக இருக்கிறார். இவரின் மகள் இந்திரஜா ஒரு சில படத்தில் நடித்துக்கொண்டு இருந்த போதே, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை என்றாலும், இவருக்கு என்று ஒரு அறிமுகம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து இணையத்தில் எப்போதும் அம்மா, அப்பாவுடன் ரிலீஸ் வீடியோவை வெளியிட்டு வந்த இவர், திடீரென தனது முறை மாமன் கார்த்திக்கை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது.

திருமணம்: ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் நடைபெற்ற இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமணத்திற்கு பிறகு இந்திரஜா தனது கணவர் கார்த்திக்குடன் விஜய் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தான், இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் செய்தியை கார்த்திக் அறிவித்து இருந்தார். கடந்த ஜனவரி மாதம் இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த வீடியோவையும் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்த நிலையில், கமலஹாசனை குழந்தைக்கு நட்சத்திரன் என அழகான தமிழ் பெயர் வைத்தார். இதனை இந்திரஜா தனது இன்ஸ்டாகிராமில் போட்டோவுடன் பகிர்ந்து இருந்தார்.

முருகன்: அதுவரை குழந்தையின் முகத்தை யாருக்கும் காட்டாமல் இருந்த இந்திரஜா, குழந்தைக்கு முருகன் வேடமிட்டு, எங்கள் வீட்டு சின்ன முருகன் நட்சத்திரன் என, குழந்தை விதவிதமான கெட்டப்பில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து இருந்தார். இந்த போட்டோவை பார்த்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து, குழந்தை அப்படியே தாத்தாவை போல இருக்கிறது என கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதையடுத்து தற்போது, இந்திரஜா, குழந்தை பிறந்து 100 நாட்கள் ஆனதை விமர்சையாக கொண்டாடி உள்ளார். ஒட்டுமொத்த குடும்பமும் பிங்க் நிறத்தில் உடை அடைந்து கொண்டு, கேட் வெட்டி 100வது நாளை கொண்டாடி உள்ளனர். அந்த போட்டோவை இந்திரஜா சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் குட்டி நட்சத்திரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த 100வது நாள் கொண்டாட்டத்தில் ரோபா சங்கரின் நெருங்கி உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











