Indraja Robo Shankar: யாரும் பார்க்காத ரோபோ சங்கரின் புகைப்படத்தை பகிர்ந்து.. மகள் இந்திரஜா கண்ணீர் பதிவு!

சென்னை: ரோபோ சங்கர் மறைந்து இன்றுடன் அதாவது செப்டம்பர் 21 ஆம் தேதி உடன் மூன்று நாட்கள் நிறைவடைந்துவிட்டது. அவர் மறைவு குறித்த பேச்சுக்கள் இன்னும் இணையத்தில் உலா வந்து கொண்டுதான் உள்ளது. ரசிகர்கள் இன்னும் தங்களது சமூக வலைதளங்களில் அவரது பழைய வீடியோக்களை பகிர்ந்து வருகிர்கள். இப்படி இருக்கும்போது ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோபோ சங்கருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவரது நினைவுகள் குறித்து எழுதியுள்ளார்.

அதாவது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " நீ இல்லாம இந்த மூன்று நாட்களும் அப்பா.. எங்களை அதிகம் சிரிக்க வெச்சதும் நீ தான். இப்போ நெறைய அழ வெக்குறதும் நீ தான். இந்த மூணு நாள் எனக்கு உலகமே தெரியல.. நீ இல்லாமே நம்ப பேமிலிய நாங்க எப்படி கொண்டு போக போறோம்னு தெரியல. நீ எனக்கு சொல்லி குடுத்த மாறி கண்டிப்பா நான் ஸ்ட்ராங்கா இருப்பேன் அப்பா. தம்பி இந்த மூணு நாளா உன்னை ரொம்ப தேடுறன் அப்பா. அப்பறம், கண்டிப்பா நீ உன்னோட நண்பர்கள் மற்றும் அண்ணன்களோட மேல சந்தோஷமாகத்தான் இருப்பேன்னு நினைக்கிறேன்.

Indraja Robo Shankar Shares Unseen Photo With Her Father Robo Shankar and Emotional Post

உங்க பொண்ணுனு நிரூபிப்பேன்: நீ சொல்லி குடுத்த மாதிரி விமர்சனங்களை பார்த்து பயப்பட மாட்டேன் அப்பா. அண்ட் கண்டிப்பா உன்னோட பொண்ணுனு பேரைக் காப்பாத்துவேன். இதுமட்டும் இல்லாம உங்களை பெருமையா உணர வைப்பேன் அப்பா. உங்களுக்கும் எனக்கும் ரொம்பவும் பிடுச்ச போட்டோ அப்பா இது. இந்த போட்டோ பார்த்துட்டு எல்லாரும் நான் உன்ன மாதிரியே இருக்கேன்னு சொல்லுவாங்க. எக்கச்சக்க ப்ரியமும், நீங்கள் இல்லாத வெறுமையும், சாரி அப்பா" என்று எழுதி உள்ளார்.

எமோஷனல் போஸ்ட்: இவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இந்திரஜா ரோபோ சங்கருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்னர், ஒரு அப்பா இறக்கும்போது அவரின் மகளுக்குள் இருக்கும் குழந்தையும் சேர்த்து இறந்துவிடுகிறது என்ற பதிவை பகிர்ந்திருந்தார். அதேபோல், அப்பா உன்னை ரொம்ப நல்லாவே வழி அனுப்பி வைச்சுட்டோம் அப்பா. நீ எப்படி எல்லாம் ஆசைப்பட்டயோ அதே மாதிரி வழி அனுப்பி வெச்சுட்டோம் என்றும் பதிவிட்டிருந்தார்.

பேரனுக்கு காதுகுத்து: இந்திரஜா ரோபோ சங்கருக்கு ரசிகர்கள் இணையதளத்தில் ஆறுதல் கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் இணையத்தில் தற்போது ரோபோ தனது பேரனுக்கு காது குத்தி, கிடா விருந்து வைக்கும் நிகழ்ச்சியை நேற்றும் இன்றும் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி காது குத்தும், 21ஆம் தேதி கிடா விருந்தும் வைக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இது தொடர்பான அழைப்பிதழ் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. ரோபோ சங்கரின் திடீர் மறைவால் இந்த சுப நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X